Chain Prayer



14-01-2026 விண்ணப்பங்கள்

  1. நமது தாயகத்தில், தனது நிலத்தை விற்க முயற்சி செய்யும் தாயார் ஒருவரின் நிலம் விற்கப்பட்டு, அதற்குரிய பணம் சரியாக இவரின் கைக்கு வந்து சேர வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. மனைவியும் பிள்ளைகளும் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில், இங்கிலாந்தில் இருக்கும் இராமச்சந்திரன் என்ற சகோதரனுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் இவருக்கு பூரண சுகம் கிடைக்கவும், குடும்பத்திற்கு விசா கிடைக்கவும் வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. இந்தியாவில் இருந்து கனடாவுக்கு வேலை விசா மூலம் இளைஞன் ஒருவருக்கு விசா புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் மிகவும் மனக்குழப்பம் அடைந்த நிலையில் மருத்துவமும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறார். இவர் கனடாவில் நிரந்தரமாக இருப்பதற்கு வேண்டிய வழிகள் திறக்கப்பட்டு, நிரந்தர வேலை செய்து எதிர்காலம் சிறப்படைய வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. இங்கிலாந்தில், உடல் முழுவதும் ஏற்பட்ட நோவால் வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருக்கும் தகப்பனார் பூரண குணமடைய வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் தனது திருமணத்தை நண்பர்களோடு நடத்த திட்டமிடும் மகள் ஒருவர் மனமாற்றமடைந்து, பெற்றோருடன் ஒற்றுமையாக திருமணத்தை  மகிழ்ச்சியாக, ஆசீர்வாதமாக நடத்த வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  6. கனடாவில்,  சகோதரி ஒருவருக்கு கண்ணின் பின்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் சிறிய குறை நீங்கி அற்புத குணமடைய வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

January 05-01-2026 விண்ணப்பங்கள்

  1.  அன்பான ஆண்டவரே! இங்கிலாந்தில், தன் கணவர் ஆண்டவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் இளம்பெண் ஒருவரின் மனவிருப்பத்தை உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  2. இரக்கத்தின் இறைவா! Toronto வில், தனது எதிர்காலத்தை குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் இளைஞன் ஒருவருக்கு, பரிசு்த்த ஆவியின் ஞானத்தைக் கொடுத்து நீரே வழிநடத்த வேண்டும் என்று மன்றாடுகிறோம். இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 
  3. குணமளிக்கும் இயேசுவே! தோல் சம்பந்தப்பட்ட குறைபாடு காரணமாக எதிர்வரும் வாரத்தில் வைத்தியரை சந்திக்க செல்லும் ஒருவருக்கு சரியான மருத்துவசிகிச்சை செய்யப்பட்டு, பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம். ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  4. வல்லமையின் ஆண்டவரே! அடிக்கடி தலைவலி வருவதால் மிகுந்த சிரமப்படும் இளம்தகப்பன் ஒருவருக்கு அவரது குடும்ப வைத்தியர் சரியான ஆலோசனைகளைக் கொடுக்கவும்,அற்புத சுகம் கிடைக்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம். இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  5. ஆசீர்வதிக்கும் இறைவா! எமது தாயகத்தில், பல வருடங்களாக குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் காணமுடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நான்கு பிள்ளைகளின் குடும்பத்தின் உயர்வுக்காக உம்மை மன்றாடுகிறோம். ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

23-11-2025 விண்ணப்பங்கள்

  1. மொன்றியலில், 2 நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக தங்கள் 13 வயது மகளை இழந்த பெற்றோருக்கும் உறவினருக்கும் உமது ஆறுதலையும்,அரவணைப்பையும் கொடுக்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. இங்கிலாந்தில், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்ட நிலையில், நோய்களின் காரணம் கண்டுபிடி்க்க முடியாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இளம்தாயார் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. கனடாவில், பிறக்கும் போதே சிறுநீரக கோளாறுகளுடன் பிறந்து சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 12 வயது சிறுவனுக்கு மீண்டும் சத்திரசிகிச்சை செய்யப்படாமல் அற்புதசுகம் கிடைக்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் குடும்பத்தலைவன் மனம்திருந்தி சரியான பாதையில் நடக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. குளிர்கால தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்காகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அனைவரும் பூரண குணமடைய வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

07-11-2025 விண்ணப்பங்கள்

  1. இந்தியாவில்,  தலைச்சுற்று மயக்கம் போன்ற நோய்களினால் வேதனைப்படும் சகோதரி ஒருவருக்கு சரியான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு பூரணசுகம் கிடைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. இலங்கையில் இருந்து இளைஞன் ஒருவன் கனடா வருவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் இறைசித்தத்தினால் முழுமையாக வழிநடத்தப்பட வேண்டும் என்றும், வீணான மனித திட்டங்கள் செயலிழந்து போக வேண்டும் என்றும், ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத சுபாவத்தால் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள ப‌‌‌ல உறுப்பினர்களை பரிசுத்த ஆவியின் வல்லமை நிரப்பி சமாதானத்தின் பாதையில் நடத்த வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. கனடாவில், கடன்கள் மற்றும் நோய்களோடு போராடிக் கொண்டு இருக்கும் குடும்பத்திற்கு சரியான வழிகள் திறக்கப்பட வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. இன்றைய பொருளாதார நெருக்கடி, வருமான பற்றாக்குறை காரணமாக குடும்பங்களில் சமாதானக் குறைவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  6. வருகின்ற கிறிஸ்மஸ், புதுவருட கொட்டாட்டங்கள் கடவுளுக்கு ஏற்ற வகையில் கொண்டாடப்பட வேண்டுமென, ஆண்டரே உம்மை மன்றாடுகிறோம்.

28-10-2025 விண்ணப்பங்கள்

  1. எமது தாயகத்தில், பாம்பு கடித்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இளம்பெண் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. கனடாவில்,கீழே விழுந்ததால் வலக்கை முறிவடைந்துள்ள 8 வயது சிறுவன் குணமடையவும், இவரின் தகப்பனார் பாரூக் என்பவருக்கு வாயில் ஏற்பட்டுள்ள கிருமித்தொற்று(infection) குணமடைய வேண்டும் என்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. கனடாவில், மாடிப்படியில் இருந்து விழுந்ததால் கால் முறிவடைந்து சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் இளம்தாயார் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. இலங்கையில் இருந்து கனடா வந்துள்ள சகோதரி ஒருவர் மாடிப்படியில் இருந்து விழுந்துள்ளதால் ஏற்பட்ட வீக்கங்கள், நோவில் இருந்து பூரண குணமடைந்து நல்லபடியாக தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. நமது தாயகத்தில், கணவனை இழந்துள்ள இளம்பெண் ஒருவர் ஆண்டவரின் ஆறுதலை நிறைவாகப் பெற்றுக் கொள்ளவும், அவரது எதிர்காலம் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  6. கனடாவில் கடந்த 8 மாதங்களாக காணாமல் போயிருக்கும் 17 வயது மகள் பத்திரமாக வீடு திரும்பி பெற்றோரோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று,ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

13-10-2025 விண்ணப்பங்கள்

  1. ரொரன்ரோவில்,அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வயதான தாயார் ஒருவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று மன்றாடுவோம்.
  2. அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கும் சகோதரன் விஜய்க்கு அந்த வேலை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்றும், மேலதிகாரிகளின் தயவு கிடைக்க வேண்டும் என்றும், நீதியாக நடத்தப்பட வேண்டும் என்றும் மன்றாடுவோம்.
  3. குடும்ப சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்டு இருக்கும் தாயாருக்கு ஏற்ற சிகிச்சைகள் செய்யப்பட்டு குணமடைய வேண்டும் என்று மன்றாடுவோம்.
  4. prostate cancer காரணமாக 30 ம் திகதி பரிசோதனைகள் செய்யப்பட உள்ள சகோதரனுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்றும், தேவையான சிகிச்சைகள் செய்யப்பட்டு பூரண குணமடைய வேண்டும் என்றும் மன்றாடுவோம்.
  5. ஐரோப்பாவில், தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு நீங்கி, கடின இருதயங்கள் மாற்றப்பட்டு  குடும்பத்தில் சமாதானம், மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.
  6. சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் மாறி ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.

29-09-2025 விண்ணப்பங்கள்

  1. அவுஸ்திரேலியாவில், பாடசாலை வெளிக்களப் பயிற்சிக்கு சென்ற Aaron என்ற 15 வயது மாணவன் திடீரென சுகயீனமுற்ற நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில்(ICU) வைக்கப்பட்டு உள்ளார். இவருடைய நோயின் காரணம் கண்டுபிடிக்கப்படவும், சரியான சிகிச்சைகள் செய்யப்பட்டு பூரண சுகமடைந்து வீடு திரும்பவும் வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால் மனச்சோர்வு ஏற்பட்டு இருக்கும் இளம்பெண் ஒருவர் ஆண்டவரின் ஒளியைப் பெற்று நம்பிக்கையோடு செயற்பட வேண்டும் என்று இறையேசுவிடம் மன்றாடுகிறோம்.
  3.  25 வருடங்களுக்கு மேலாக அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஒருவர் விரைவில் விடுதலை செய்யப்பட்டு தன் தாயார், சகோதரிகளுடன் இணைந்து கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக தலைமுடி உதிரந்து கொண்டிருக்கும் சிறுமிக்கு பூரணசுகம் கிடைக்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. எதிர்கால முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கும் ஒருவரின் வழிகளில்  வெற்றி பெற நம் ஆண்டவர் உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுவோம்.

11-09-2025 விண்ணப்பங்கள்

  1. கால் தசைநாரில்(ligament)வெடிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து  நடக்க கஷ்டப்படும் சகோதரிக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம.
  2. இலங்கையில் இருந்து மாணவ விசா மூலம் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் வாலிபனுக்கு விசா கிடைக்கவும், அதற்குரிய தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்றும், இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. பிள்ளைகள் உள்ள குடும்பம் ஒன்றில், பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டிருக்கும் சமாதானக் குறைவு நீங்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. பல்வேறு போராட்டங்களினால் மனச்சமாதானம் குறைந்து தூக்கமில்லாமல் தவிக்கும் கணவன், மனைவிக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் பரிசுத்த ஆவியின் நிரப்புதல் கிடைக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. கனடா நாட்டை சீரழிக்கும் பலவிதமான தீமையான செயற்பாடுகளில் நாடு விடுவிக்கப்பட்டு ஆசீர்வாதமான தேசமாக விளங்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

27-08-2025 விண்ணப்பங்கள்  

  1. பெலன் தரும் ஆண்டவரே! புற்றுநோயால்(pancreas cancer)பாதிக்கப்பட்டு chemotherapy செய்து கொண்டிருக்கும்,ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த Dr. Gizella Baghy எதிர்வரும் நாட்களில் MRI மற்றும் பரிசோதனைகளுக்கு ஊடாக செல்ல வேண்டி உள்ள சூழ்நிலையில், அவருக்கு வேண்டிய உடல் மன பெலத்தைக் கொடுத்து, எடுக்க வேண்டிய முடிவுகளை சரியாக எடுக்க உதவி செய்ய வேண்டுமாய், உம்மை மன்றாடுகிறோம்.
  2. திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆறுதல் செய்கிறவரே! நோயினால் தங்கள் தாயை இழந்த நிலையில் இருக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் ஆசீர்வதிக்க வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. குணப்படுத்தும் ஆண்டவரே! சிறுவன் ஒருவருக்கு இருக்கும் தோல்நோயினால் அதிகமாக இருக்கும் சொறிவு பூரண குணமடைய வேண்டுமென்றும் இன்னொரு சிறுவனுக்கு இருக்கும் eczema(தோல்நோய்) பூரண குணமடைய வேண்டும் என்றும், உம்மை மன்றாடுகிறோம்.
  4. வழிநடத்தும் ஆண்டவரே! ஆரம்பமாக உள்ள புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள், ஆசிரியர்களை ஞானமாகவும், பாதுகாப்பாகவும் வழிநடத்த வேண்டும் என்று, உம்மை மன்றாடுகிறோம்.
  5. அன்பான ஆண்டவரே! வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இளம்பிள்ளைக்கு அதற்குரிய காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று, உம்மை மன்றாடுகிறோம்.

16-08-2025 விண்ணப்பங்கள்

  1. தாயின் கருவிலே பெயர் சொல்லி அழைத்த ஆண்டவரே! வெளிநாடு ஒன்றில் குரு நிலைக்கு வருவதற்காக படித்துக் கொண்டு இருக்கும் சகோதரன், தனது குருப்பட்டத்தை பெற்று உமது பணியை வல்லமையாக செய்ய ஆசீர்வதிக்க வேண்டும் உம்மை மன்றாடுகிறோம்.
  2. நெருக்கடியில இருந்து விடுவிக்கும் இறைவா! நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும் வேலை பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கும் குடும்பத்தலைவன் ஒருவருக்கு, அதே வேலையில் நிலைத்திருக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. விடுதலையின் ஆண்டவரே! அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் ஐந்து பிள்ளைகளின் தகப்பன் ஒருவரும், மூன்று பிள்ளைகளின் தகப்பன் ஒருவரும், ஒன்பது பிள்ளகளின் தகப்பன்  ஒருவரும் மனம்திரும்பி தங்கள் குடும்பத்தில் அன்பு, ஒற்றுமை, சமாதானத்தோடு வாழ வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. குணமளிக்கும் இறைவா! கனடாவில், 20 வயதான Faith என்ற இளம்மகளுக்கு புற்றுநோய் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் செய்யப்படும் சிகிச்சைகள் சரியான முறையில் செய்யப்பட்டு, உமது அற்புத வல்லமையால் பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

07-08-2025 விண்ணப்பங்கள் 

  1. அன்பான ஆண்டவரே! Kitchener இல் இருக்கும் இரு குழந்தைகளின் தகப்பனான எட்வின் என்ற சகோதரன் புதிய வேலையில் இணைந்து கொள்ள தேவையான அமெரிக்க விசா (TN visa) வெகுவிரைவில் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. குணமளிக்கும் இறைவா! நமது தாயகத்தில், திருகோணமலையில் இருக்கும் சகோதரி ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பிலிருந்து பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்றும், அவருக்கு வேண்டிய உடல், மன தைரியத்தை கொடுக்க வேண்டும் என்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  3. இரக்கத்தின் ஆண்டவரே! வைத்தியசாலையில் கோமா நிலையில் இருக்கும் சகோதரி மடோனாவுக்கு நினைவு திரும்ப வேண்டும் என்றும், அவரது கணவனுக்கு கிடைத்த விசாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்கி அவர் கனடாவுக்கு வரவேண்டும் என்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  4. நம்பிக்கையின் ஆண்டவரே! கொழும்பில் இருக்கும் 30 வயதான மகளுக்கு செய்ய வேண்டி உள்ள பரிசோதனை( ultrasound) சரியான நேரத்தில் செய்யப்பட்டு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. அற்புதத்தின் ஆண்டவரே! ஒரு வகையான பூஞ்சைத் தொற்று( yeast infection) காரணமாக வைத்திய சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் இளம் தாயாருக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

23-07-2025 விண்ணப்பங்கள்

  1. கொழும்பில், கையில் புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மாத குழந்தைக்கு, கை நீக்கப்படாமல் உமது குணமாக்கும் வல்லமையால் பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. வீடு வாங்குவதற்காக வங்கியில் கடன்(mortgage) எடுக்க முயற்சி செய்யும் குடும்பத்தின் வழிகளில் உமது சித்தம் செயற்பட வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. ஒரு குடும்பத்தில் இருக்கும் பாவ, சாப,விக்கிரக கட்டுக்கள் முறியடிக்கப்பட்டு, இறை ஒளி வல்லமையாக செயற்பட்டு  குடும்பத்தில் ஒற்றுமை, சமாதானம் நிலவ வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. நான்காம் கட்ட புற்றுநோய் காரணமாக வைத்திய சிகிச்சையின்றி மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் சகோதரிக்கு உடல் பலத்தையும், மன தைரியத்தையும் நிறைவாக கொடுக்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. எமது புதுவாழ்வுக் குழுவின் பணிகள் மேலும் சிறப்பாக நடப்பதற்கும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  6. வேலைக்கான அனுமதிப் பத்திரம் இன்னமும் புதுப்பிக்கப்படாத காரணத்தால் தனது நாட்டிற்கு விடுமுறையில் சென்றிருக்கும் அரவிந்த் என்ற இளம் குடும்பத் தலைவனுக்கு விரைவி்ல் விசா கிடைக்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. கணவனை இழந்து, தனிமையில் இருக்கும் மகள் ஒருவருக்கு வெளிநாடு வருவதற்கான வழிகள் திறக்கப்பட வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

17-07-2025 விண்ணப்பங்கள்

  1. கண்பார்வைக் கோளாறினால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் தாயார் ஒருவருக்கு செய்யப்படும் பரிசோதனைகள் வழியாக காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் பூரண குணமடைய வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. வேலைக்கான பரீட்சை ஒன்றை எழுத வேண்டியுள்ள ஒருவர் அதை நல்லபடி எழுதி முடிக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. இந்தியாவில், பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருந்த மாணவிக்கு தவறான பாடத்திற்கு அனுமதி வந்திருப்பதால் அதை மாற்ற எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. ADHD(Attention deficit hyperactivity disorder, அவதானக் குறைவும், அதிகூடிய செயற்பாடு) காரணமாக மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கும் ஒருவர் பூரண குணமடைய வேண்டும் என்றும், அவர் மாத்திரை இல்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. பிரயாணங்களை மேற்கொள்ள இருப்பவர்கள் பாதுகாப்பாக சென்று வர உதவிசெய்ய வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  6. சகோதரி மடோனாவிற்கு நினைவு திரும்பி தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பலத்தையும் சுகத்தையும் கொடுக்க வேண்டும் என்று,  இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  8. பெற்றோரிடம் இருந்து பிரிந்து போயிருக்கும் மகள் அவர்களுடன் ஒன்றிணையவும்,  இன்னும் ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனையால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு  தகப்பனோடு இருக்கும் பிள்ளைகள் மீண்டும் தாய் தகப்பனோடு சேர்ந்து வாழும் நிலை உருவாக வேண்டும் என்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

25-06-2025 விண்ணப்பங்கள்

  1. அன்பான ஆண்டவரே! கனடாவில், காயத்ரி என்ற சகோதரிக்கு வரவேண்டிய வேலைப்பத்திரம் கிடைக்கவும், வருகிற வியாழக்கிழமை நடக்க இருக்கிற நேர்முகத்தேர்வில் மூலம் இவர் நிரந்தரமான, முழுநேர வேலையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
  2. அரவணைக்கும் இறைவா! இந்தியாவில், படுக்கையில் இருக்கும் தகப்பனார் ஒருவருக்கு உமது இரக்கமும்,அரவணைப்பும் நிறைவாக கிடைக்க வேண்டுமென்று,  உம்மை மன்றாடுகிறோம்.
  3. உதவி செய்யும் இயேசுவே! ஒரு குடும்பத்தில் இருக்கும் போராட்டங்கள், பிரச்சனைகள், உபத்திரவங்கள், சண்டைகள் நீங்கி உமது ஒளியால் குடும்பம் பிரகாசிக்கவும், உமது வழியில் நடத்தப்படவும் வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
  4. மன்றாட்டைக் கேட்கும் ஆண்டவரே! பல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் இளம்பிள்ளைகள் தங்கியிருந்து படிப்பதற்கு பாதுகாப்பான நல்ல இடம் கிடைக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

13-06-2025 விண்ணப்பங்கள்

இந்தியா விமானவிபத்தில் இறந்த அனைவருக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

இந்தியாவில் இருந்து கனடாவிற்கு வேலை விசாவில் வந்த இளைஞன் தொடர்ந்தும் கனடாவில் வசிப்பதற்கு வேண்டிய வழிகள் திறக்கப்பட வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.

இரண்டு முழங்கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் சகோதரன் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

கனடாவில் இருக்கும் சகோதரி அருந்ததிக்கு சொந்தமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலம் இன்னொருவரின் பெயரில் இருப்பதால், அந்த நிலத்தை இவர்களுக்கு மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் சரியான வழியில் செய்யப்படவும், எல்லாவிதமான தடைகளும் நீங்கி வழிகள் திறக்கப்பட்டு எதுவித பிரச்சனைகளும் இல்லாமல் நிலம் இவர்களின் கைக்கு வந்து சேர வேண்டும் என்றும், இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

இந்தியாவில், பாரத்தை தூக்கியதால் முதுகு எலும்பில் வெடிப்பு ஏற்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் இருக்கும் மகள் விரைவில் பூரண குணமடையவும், இடுப்பு எலும்பில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருந்த அவரது சித்தி கீழே விழுந்ததால் மீண்டும் அதே இடத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பு குணமாக வேண்டும் என்றும், ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

கனடாவில், 19 ம் திகதி சிறுநீரக தொகுதியில் உள்ள பிரச்சனைக்காக சத்திரசிகிச்சை செய்யவுள்ள சகோதரிக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருக்கும் வாலிபனுக்காக எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

இந்தியாவில், பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் இரட்டைச் சகோதரிகளுக்கு தேவையான புள்ளிகள் கிடைத்து நல்ல இடத்தில் அனுமதி கிடைக்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

06-06-2025 விண்ணப்பங்கள்

  1. அன்பான ஆண்டவரே! கொழும்பில், எதிர்வரும் 9ம் திகதி வைத்திய பரிசோதனைகள் செய்ய உள்ள சகோதரிக்கு நல்ல பதில் கிடைக்கவும், நோய்களில் இருந்து பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  2. குணமளிக்கும் இறைவா! கனடாவில், வருகிற 18ம் திகதி கர்ப்பப்பை நீக்குவதற்காக சத்திரசிகிச்சை செய்யப்பட இருக்கும் சகோதரிக்கு சத்திரசிகிச்சை நல்லபடி செய்யப்பட்டு சுகமாக வீடு திரும்ப வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. வழிநடத்தும் ஆண்டவரே! கனடாவில், ஈரல் முற்றாக பாதிக்கப்பட்டு இருக்கும் 68 வயது தகப்பனாருக்கு, ஈரல் மாற்றுவதற்கான வழிகள் திறக்கப்பட்டு விரைவில் சத்திரசிகிச்சை நடைபெற வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. அற்புதம் செய்யும் இறைவா! இலங்கையில், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய காத்திருக்கும் சகோதரன் துஷாந்திற்கு காலில் ஏற்பட்ட புண் குணப்பட்டு, சிகிச்சைகள் நல்லபடி நடக்க வழி திறக்கப்பட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. உதவி செய்யும் ஆண்டவரே! கனடாவில், அவசியமான சூழ்நிலையில், விற்பதற்காக போடப்பட்டுள்ள வீடுகள் விரைவில் விற்கப்பட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

May 21 விண்ணப்பங்கள்

  1. இலங்கையில் இருந்து கனடாவிற்கு வந்திருக்கும் தாய்க்கு தொடர்ச்சியாக இரவு முழுவதும் நித்திரை இல்லாமல் இருக்கும் நிலைமை மாறி நிம்மதியாக உறங்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பம் ஒன்றில், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் நீங்கி ஒற்றுமையாக வாழவேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. தன் மகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் வழிநடத்த முயற்சி செய்யும் தகப்பனுக்கு கீழ்படியாமல் இருக்கும் பெண்பிள்ளை மனம்திரும்ப வேண்டும் என்றும், கீழ்ப்படிவு இல்லாமல் குடும்ப சமாதானத்திற்கு இடையூறாக இருக்கும் பிள்ளைகள் அனைவரும் கடவுளின் அருளைக் கண்டடைய வேண்டுமென்றும், இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. கனடாவில், சிறுநீர்ப்பை தொற்று(bladder infection) காரணமாக சிறிய சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் சகோதரன் குணமடைந்து தனது வேலைக்கு திரும்பிச் செல்ல வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. இங்கிலாந்தில், சிறுநீருடன் இரத்தக்கட்டிகள் வெளியேறியதால்  சிகிச்சை செய்து கொண்டிருக்கும் சகோதரனுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் பூரண சுகம் கிடைக்க வேண்டுமென்று,  இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  6. இலங்கையில் பிலிப்(Phillip) என்ற சகோதரனுக்கு சிறுநீரக வால்வு சுருக்கம் காரணமாக செய்யப்படும் சிகிச்சைகள் பூரண சுகத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7.  கனடாவில், சிறுநீர்ப் பாதையின் சுருக்கம் காரணமாக நாளை பரிசோதனைக்கு செல்ல இருக்கும் சகோதரனுக்கு நல்லபடியாக பரிசோதனை நடக்கவும், பூரண குணமடையவும் வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  8. இலங்கையில், வயதான தாயைப் பராமரிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஜெறோம்(Jerome) என்ற மகன் விபத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், இவருக்கு விரைவில் நல்ல சுகம் கிடைத்து மீண்டும் தனது தாயின் கடமைகளைச் செய்ய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  9. இலங்கையில், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் நோய்கள் குணமடைந்து, இருவரும் குடும்பத்தை மீண்டும் தமது பராமரிக்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  10. கனடாவில், நீண்ட நாட்களாக இருமலால் குணமடையாமல் இருக்கும் சகோதரன் ஒருவரும், சகோதரி ஒருவரும் அற்புத சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

30-04-2025 விண்ணப்பங்கள்

  1. கனடாவில், சிறுமி ஒருவருக்கு தொடர்ச்சியாக இருக்கும் இரும்புச்சத்து குறைபாடு உமது திருஇரத்தத்தின் வல்லமையால் மாத்திரை இல்லாமல் இருக்கக் கூடிய அற்புதசுகம் கிடைக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. கனடாவில், கல்லீரலில் கொழுப்பு(fatty liver) இருக்கும் இளம் குடும்பத் தலைவன் ஒருவருக்கு பூரணசுகம் கிடைக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. கொழும்பில், தலைவலி காரணமாக பரிசோதனைகளுக்கு செல்ல இருக்கும் சகோதரிக்கு நல்ல பதில் கிடைக்கவும், சரியான சிகிச்சைகள் செய்யப்பட்டு குணமடைய வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. கனடாவில், முள்ளந்தண்டு வால் எலும்பு (tail bone) வலிக்கு சிகிச்சைகள் இல்லாத நிலையில் சகோதரியை உமது சுகமாக்கும் வல்லமை குணப்படுத்த வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. யாழ்ப்பாணத்தில், உடல் மற்றும் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகி ஒருவரோடும் பேசாமல், ஆன்மீக காரியங்களிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் 78 வயது தகப்பன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று,  ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. இங்கிலாந்தில், குடும்பத்தலைவன் ஒருவருக்கு இருக்கும் பல்வேறு உடல்நல குறைவுகளுக்கு ஏற்ற சிகிச்சைகள் செய்யப்பட்டு சுகமடைய வேண்டும என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  7. கனடாவில், பிரயாண தடை காரணமாக பல சிரமங்களைச் சந்தித்து கொண்டிருக்கும் குடும்பத்தின் தடைகள் நீக்கப்பட்டு எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று வர வழிகள் திறக்கப்பட வேண்டும் என்று,  இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  8. கனடாவில், தோள்மூட்டு நரம்பு இழுபட்டு இருப்பதால் கை தாக்க முடியாமல் கஷ்டப்படும் தாயாருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

22-04-2025 விண்ணப்பங்கள்

  1. எமது திருத்தந்தை புனித பிரான்ஸிஸின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், அவரது இறுதிச் சடங்குகள் அமைதியான முறையில் நடைபெறவும் வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. எமது கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசரின் தெரிவு உமது சித்தப்படி, உமது வழிநடத்தலில்  நடைபெற வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. கனடாவில், இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் சகோதரனுக்கு இரத்தக்குழாயில் நீக்கப்பட முடியாமல் இருக்கும் அடைப்புக்கள் நீங்கிப் போகவும்  அவருக்கு பூரணசுகம் கிடைக்கவும் வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. திடீரென ஏற்பட்ட உடல்சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சகோதரன் விரைவில் பூரணசுகம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. France இல், காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து பேச்சுத்திறனை இழந்து இருக்கும் மூன்று வயது சிறுவன் மீண்டும் உமது வல்லமையால் பேசவும், உமது பெயரை அறிக்கை செய்யவும் வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  6. அவசியமான சூழ்நிலையில் கார்கள் இரண்டும் பழுதடைந்த நிலையில் இருக்கும் குடும்பத்திற்கும் மற்றும் ஒரு மகனுக்கும் ஏற்ற ஆசீர்வாதமான கார்கள் கிடைக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்துள்ள ஒருவரின் முயற்சிகள் ஆசீர்வதிக்கப்படவும், புதிய வழிகளும் திறக்கப்பட வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  8. பயணங்களை மேற்கொள்ள இருப்பவர்கள் எந்த தடைகளும் இல்லாமல் பாதுகாப்பாக கனடா திரும்ப வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  9. இருமல், காய்ச்சல், சளியினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் குணமடைய வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  10. Oshawa வில்,மூச்சுத் திணறல் காரணமாக 28 வயது மகளை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு இறைவனின் ஆறுதலும், அரவணைப்பும் கிடைக்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

02-04-2025 விண்ணப்பங்கள்

  1. இலங்கையில்,கணவனை இழந்த நிலையில் இருக்கும் இளம்பெண் ஒருவருக்கு வெளிநாட்டுக்கு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. இங்கிலாந்தில், 20 மாத பெண் குழந்தைக்கு இரண்டு புற்றுநோய் கட்டிகள்  இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை(chemotherapy)நடைபெற்றுக் கெண்டிருக்கும் வேளையில், அந்த சிறுமிக்கு எந்த சத்திரசிகிச்சையும் இல்லாமல் உமது அற்புத வல்லமை தொட்டுக் குணப்படுத்த வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. France இல், தங்கள் மகனை திடீரென இழந்த நிலையில் இருக்கும் தாயாருக்கு இருதயத்தில் 3 வால்வுகளும்(heart stents)தகப்பனுக்கு 1 வால்வும் பொருத்தப்பட்டுள்ள நிலயில், இருவரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு பலவீனமாக இருப்பதால், இவர்களின் உடல்நிலை பெலனடைய வேண்டுமென்றும், குடும்பத்தினர் அனைவரும் மன ஆறுதலும், உறுதியும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

28-03-2025 விண்ணப்பங்கள்

  1. குணமளிக்கும் ஆண்டவரே! இந்தியாவில்,விபத்தில் அகப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் விக்டர் என்ற சகோதரன் பழையபடி நடக்கவும், இடுப்பு எலும்பில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் எஸ்தர் என்ற சகோதரி எழுந்து நல்லபடியாக நடக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. ஆறுதலின் இறைவா! France இல், தனது மாமனாரின் திடீர் இழப்பை அறியாமல் அவரை மிக அதிகமாகத் தேடி தவித்துத் கொண்டுருக்கும் பிறேம் ராஜ் என்ற 5 வயது சிறுவனின் மனதில் இறைசமாதானம் நிறைவாக செயற்பட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. கட்டுக்களை அறுத்தெறியும் ஆண்டவரே! கனடாவில், பயம் என்கிற கட்டுக்குள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் 22 வயது மகன் பூரண விடுதலை அடைந்து, உமக்கு சாட்சியாய் வாழ வரமருள வேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறோம்.
  4. உதவி செய்யும் இறைவா! மாணவர்களுக்கான விசாவில் கனடா வந்திருக்கும் Shiyani என்ற மகளுக்கு விசா புதுப்பிக்கப்படவும், வேலைக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. பலப்படுத்தும் ஆண்டவரே! ரொரன்ரோவில், கீழே விழுந்ததால் பலவீனமாக இருக்கும் வயதான தாயார் ஒருவர் குணமடையவும், அவரைப் பராமரிக்க வேண்டிய உதவிகள் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  6. துன்பத்தில் துணையான இறைவா! யாழ்ப்பாணத்தில் 35 வயதான மகளை திடீரென இழந்த பெற்றோர்,சகோதர, சகோதரிகள்,உற்றார் உறவினர்களின் துயரம் ஆற்றித் தேற்றப்படவும், அவரின் நல்லடக்க நிகழ்வுகளுக்காகவும் உம்மிடம் மன்றாடுகிறோம். 

23-03-2025 விண்ணப்பங்கள்

  1. இந்தியாவில், வருகிற 27ம் திகதி முக்கியமான பரீட்சை ஒன்றை எழுதவுள்ள அபி, அக்சயா என்ற இரட்டைச் சகோதரிகளுக்கு நிறைவான ஞானத்தைக் கொடுத்து அவர்களின் மனவிருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2.  கனடாவில், தனது வேலைக்குரிய பரீட்சை எழுதுவதற்காக தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் வாலிபன், தனது முயற்சியில் வெற்றியடைந்து அதற்குரிய நல்ல வேலையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. ரொரன்ரோவில், இரத்தக் கொதிப்பு( blood pressure)அளவு கூடுதலாக உள்ள பிரதீப் என்ற இளம்தகப்பனாருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. ரொரன்ரோவில், எதிர்வரும் 30ம் திகதி நடக்க இருக்கும் திருமணம் நல்லபடி நடக்கவும்,மணமக்கள் இறைஆசி பெற்று நிறைவாக வாழ வேண்டும் என்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  5. ரொரன்ரோவில், இருதய நோய் காரணமாக pacemaker பொருத்தப்பட்டு  மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் Daisy என்ற தாயாருக்கு நல்ல உடல்பலத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. கனடாவில், மார்புப் பகுதியில் கட்டி இருக்கும் தாயார் ஒருவருக்கு செய்யப்பட உள்ள பரிசோதனைகள் சரியானபடி நடக்கவும், நல்ல பதில்கள் கிடைக்க வேண்டுமென்றும் இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  7. இந்தியாவில், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இரண்டு வயது சிறுவன் பூரணசுகம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  8. தலைமுறை, தலைமுறையாக  மந்திர, தந்திர, சூனியக்கட்டுகளால் தொடர்ச்சியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  இந்தக் கட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று இறைஒளியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இந்தக் குடும்பங்களின் தலைமுறையினர் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும்  இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.

25-02-2025 விண்ணப்பங்கள்

  1. Waterloo வில் கல்வி கற்று வரும் புருனோ (Bruno) என்ற மாணவனுக்கு அவர் எதிர்பார்க்கிறபடி Co-Op வேலை கிடைக்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் தாயாருக்கும் மற்றும் அரவிந்த் என்ற இளம் தகப்பனுக்கும் ஏற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. திருமணமாகி 7 வருடங்களாகிய நிலையில் விவாகரத்து செய்ய திட்டமிடும் Ken, Tisha எ‌‌ன்ற தம்பதியினருக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, குழந்தைச் செல்வத்தை பெற்று ஆசீர்வாதமாக வாழ வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. France இல் தலை நரம்பு வெடித்ததால், 30 வயதான தங்கள் மகனை இழந்து நிற்கும் பெற்றோரையும், மனைவியையும், உறவுகளையும் ஆற்றித் தேற்ற வேண்டுமென்றும், அவரின் இறுதிச் சடங்குகள் நல்லபடி நடக்க வேண்டுமென்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

12-02-2025 விண்ணப்பங்கள்

  1. விண்ணப்பத்தைக் கேட்பவரே! இந்தியாவில், மூன்று வருடமாக பல இக்கட்டுகளுக்கு மத்தியில் படித்த பட்டப்படிப்பை, கிறிஸ்தவன் என்ற காரணத்தால் உயிர் அச்சுறுத்தல் காரணமாக விட்டு வந்து சொந்த ஊரில் புதிதாக படிப்பை ஆரம்பித்துள்ள மகன்Joe Sam வருகிற 24 ம் திகதி எழுதவுள்ள முக்கிய பரீட்சையில் சிறப்பான வெற்றியைப் பெற வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. இரக்கத்தின் இறைவா! இக்கட்டான சூழ்நிலையில் வீடு விற்பதற்காக முயற்சி செய்யும் குடும்பத்தினரின் வீடு நல்ல விலைக்கு விற்கப்பட வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. வல்லமையின் ஆண்டவரே! வருகிற மாதம் நடக்க இருக்கும் திருமணம் குடும்பங்களின் ஒற்றுமையோடு ஆசீர்வாதமாக நடக்க வேண்டும் என்று  உம்மை மன்றாடுகிறோம்.
  4. அற்புதம் செய்யும் இறைவா! மருத்துவ பரிசோதனை செய்து பதிலுக்காக காத்திருக்கும் குடும்பத்தலைவன் ஒருவருக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. குறைவுகளை நிறைவாக்கும் ஆண்டவரே! நமது தாய்நாட்டில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய காத்திருக்கும் இளம் குடும்பத்தலைவன் ஒருவரின் பொருளதார தேவைகள் நிறைவாக கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. ஆசீர்வதிக்கும் இறைவா!இங்கிலாந்தில் கணவன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் தனிமையில் இருக்கும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் பாதுகாப்புடன் எதிர்காலம் ஆசீர்வதிக்கப்பட்டு வாழ வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  7. குணமாக்கும் ஆண்டவரே! தோல்நோய் காரணமாக சிகிச்சை பெற்று வரும் சகோதரி பூரண குணமடையவும், தன் குடும்ப வாழ்வின் ஆசீரைப் பெற்றுக் கொள்ளவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

26-01-2025 விண்ணப்பங்கள்

  1. ஐரோப்பாவில், கணவன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளோடு பல பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டு இருக்கும் சகோதரிக்கு வேண்டிய மனத்தைரியம் கிடைக்கவும்,அவரின் விருப்பங்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், அவருக்கு உடல் மன ஆரோக்கியம் நிறைவாக கிடைக்க வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. நீண்ட நாட்களாக இருமலினால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாக இருக்கும் அனைவருக்கும் அவர்களது குரல்வளம், உடல்நலம் பழையநிலைக்கு திரும்பி பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. சுவாசப்பிரச்சனையால் அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருப்பவர்கள் சுகமடையவும்,பல்வேறு நோய்களோடு வைத்தியசாலையில் இருப்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், காய்ச்சல், வாந்தி, இருமலால் பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் சிறுவர், சிறுமியர்கள் குணமடைய வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. எமது தாயகத்தில், சிறுநீரகமாற்று செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் 35வயது மகன் அன்ரனி துஷாந்திற்கு சிறுநீரக தானம் செய்ய ஒருவர் முன்வந்து அதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு கொண்டு இருக்கும் வேளையில், இதற்குரிய சகலவழிகளும் திறக்கப்பட்டு சத்திரசிகிச்சை வெற்றியாக நடக்க வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம். 
  5. ஆசிரியராக பணிபுரிந்த ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கைநடுக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் வேலைசெய்யமுடியாமல் இருக்கும் நிலைமாறி பூரணசுகமடைய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. இங்கிலாந்திலும், கனடாவிலும் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்வதற்காக காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பரிசோதனைகள் சரியாக நடக்கவும் நல்ல பதில்கள் கிடைக்கவும் வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  7. நீண்டகாலமாக தங்கள் மகளின் குடும்பத்துடன் இருந்த வயதான பெற்றோருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் வேறு இடத்திற்கு தற்காலிகமாக சென்றிருக்கும் வேளையில், மீண்டும் அவர்கள் தங்கள் மகளின் குடும்பத்தில் இணைந்து வாழும் சூழ்நிலைகள் உருவாக வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  8. குடிப்பழக்கத்தினால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டு இருக்கும் குடும்பத்தலைவர்கள் மனம்திருந்த வேண்டும் என்றும், குடிப்பழக்கம் உள்ள பெண்கள் மனம்திருந்த வேண்டும் என்றும், வீண்சந்தேகத்தினால் குடும்ப அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவர்கள் மனம்திருந்த வேண்டும் என்றும், பெண்கள் நல்ல பண்புகளோடு ஞானமாக நடந்து குடும்பத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  9. கனடாவில்,வாகன விபத்தில் 40 வயதான குடும்பத் தலைவனையும் 3 வயது சிறுமியையும் இழந்து ஆறாத்துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கும், France இல், கடும் இருமலினால் 39 வயதான குடும்பத் தலைவனை இழந்து நிற்கும் குடும்பத்தினரையும், மொன்றியலில் 57 வயதான தாயாரை இழந்து நிற்கும் குடும்பத்தினரையும் உமது ஆறுதலும், அரவணைப்பும் ஆற்றித் தேற்ற வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

20-01-2025 விண்ணப்பங்கள்

  1. பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது பாடத்திட்டத்தை மாற்றி வேறு பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கு விண்ணப்பிக்க எடுக்கும் முயற்சியை நீர் வழிநடத்த வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பழுதடைந்த நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு ஏற்ற ஆசீர்வாதமான வாகனம் கிடைக்க வேண்டுமாய் இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. புதிய தொழிலை தொடங்க இருக்கும் ஒருவருக்கு வேண்டிய ஆலோசனைகள், வழிகளை நீரே சொல்லிக் கொடுத்து அவர் செய்யும் காரியங்களில் வெற்றி கொடுக்க வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. இருமல், காய்ச்சல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் நீர் பூரணசுகத்தை கொடுக்க வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. திருமண வயது வந்தும் திருமணம் செய்ய மறுத்து நிற்கும் மகனின் மனதில் நல்ல மாற்றத்தைக் கொடுக்க வேண்டுமென்றுஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. எமது தாயகத்தில் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைகளை செய்ய உள்ள தாயார் ஒருவருக்கு அற்புதசுகம் கிடைக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. தமது குடும்பப் பொறுப்புகளை உணராமல், சரியாக செய்யாமல் இருக்கும் குடும்பத் தலைவனுக்காகவும் அவரது குடிப்பழக்கத்தில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

18-12-2024 விண்ண்பங்கள்

  1. இந்தியாவில், திருமணமாகி 6 வருடங்களாக குழந்தைப்பேற்றுக்காக காத்திருக்கும் தர்மராஜ், ராதிகா தம்பதிக்கு, விரைவில் குழந்தைச் செல்வத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. விடுமுறை நாட்களுக்கான பயணங்களைத் திட்டமிடும் குடும்பங்களை பாதுகாப்பும்,மகிழ்ச்சியுமான வழியில் நடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. கனடாவில், வேலைக்கான நேர்முகத் தேர்வை(interview) முடித்து விட்டு காத்திருக்கும் சகோதரி ஒருவருக்கு விரைவில் நல்ல பதில் கிடைக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. மூன்று வாரமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரகாசினி என்ற இளம்மகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. கனடாவில், அரவிந்த் என்ற மாணவன் தனது படிப்பை முடித்து வேலை அனுமதிப் பத்திரத்திற்கு(work permit)விண்ணப்பித்திருக்கும் வேளையில், அவருக்கான அனுமதி கிடைத்து அவரது மனைவியும், குழந்தையும் கனடா வந்து சேர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  6. இந்தியாவில்,வலிப்பு நோய் காரணமாக  ஒரு மாதத்திற்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில்(ICU) இருந்து வீடு திரும்பி இருக்கும் பிலோமினா என்ற தாயாரும், சுவாசப் பிரச்சனை காரணமாக ஒரு வாரமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வீடு திரும்பி இருக்கும் சகோதரன் கண்ணனும்  பூரண குணமடைந்து தமது அன்றாட கடமைகளைச் செய்ய வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. நாம் வாழும் கனடா தேசத்தின் அரசியல், பொருளாதார சூழ்நிலைகள் நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய பாதையில் வழிநடத்தப்பட வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

04-12-2024 விண்ணப்பங்கள் 

  1. இரக்கமுள்ள ஆண்டவரே! ரொரன்ரோவில்,எதிர்வரும் வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனை ஒன்றை செய்ய இருக்கும் இளம்தாயார் ஒருவருக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. அன்பான இறைவா! அலன் என்கிற மாணவன் இந்தியா செல்வதற்காக சகல ஒழுங்குகளையும் செய்திருக்கும் நிலையில், தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள விசாவுடன் கூடிய கடவுச்சீட்டு(passport & visa) தபாற்சேவை வேலைநிறுத்தம் காரணமாக தாமதிப்பதால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். இவரது passport விரைவில் கையில் வந்து சேர வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. ஆசீர்வதிக்கும் ஆண்டவரே, ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் சிலர் இணைந்து முதலீட்டு தொழில் ஒன்றை செய்ய திட்டமிட்டுள்ள வேளையில், அதற்குரிய காரியங்கள் அனைத்தையும் நீர் வழிநடத்தி நிறைவாக்கி கொடுக்க வேண்டுமாய் உம்மை மன்றாடுகிறோம்.
  4. குணமளிக்கும் இறைவா! நுண்ணுயிர் தொற்று (Bacterial infection) ஒன்றினால் பாதிக்கப்பட்டு உள்ள மகன் ஒருவருக்கும், காய்ச்சலினால் பாடசாலை செல்ல முடியாமல் இருக்கும் மாணவிக்கும்  பூரண சுகம் கிடைக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. வல்லமையின் ஆண்டவரே! இக்கட்டான சூழ்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவருக்கும் உமது அற்புத சுகம் கிடைக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  6. வெற்றியின் இறைவா! இந்தியாவில், அவசியமான திருத்த வேலை செய்ய வேண்டிய வீட்டின் உறுதிப்பத்திரங்கள் பதிவு செய்வதில் உள்ள தடைகள் நீங்கி நிலம் பதிவு செய்யப்பட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

14-11-2024 விண்ணப்பங்கள்

  1.  எமது தாயகத்தில், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அன்ரனி. துஷாநந்த் என்ற இளம் குடும்பத்தலைவனுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருப்பதால் அந்த பரிசோதனைகளுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. காலில் ஏற்பட்ட புண் காரணமாக மிகவும் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசிகிச்சை செய்து கொண்டிருக்கும் சகோதரனுக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இந்தியாவில்,வியாபாரம் செய்யும் குடும்பத்தலைவன் தொழிலில் தொடர்ச்சியாக ஏற்படும் தடைகள், பின்னடைவுகள் மாறி செய்யும்காரியங்களில் வெற்றி பெற்று முன்னேற வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இந்தியாவில், பல்கலைக்கழக இறுதிப் பரீட்சைகளுக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் வசந்தன் என்ற மகன், பரீட்சைகளில் வெற்றி பெற்று படிப்புக்கான வேலையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. கனடாவில்இருந்து இலங்கை சென்றிருக்கும் சகோதரி ஒருவரின் பயணம் நல்லபடி அமையவும், அவர் மன அமைதியோடு மீண்டும் கனடா திரும்ப வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

24-10-2024 விண்ணப்பங்கள்

  1. குணமளிக்கும் ஆண்டவரே! அடிக்கடி வாந்தி எடுக்கிற காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இளம்மகள் பூரண குணமடைந்து நல்லபடி வீடு திரும்ப வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. அற்புதம் செய்யும் இறைவா!  அமெரிக்காவில், கீழே விழுந்து சீமேந்து கல்லில் தலை அடிபட்டதால் கோமா நிலையில் இருக்கும் கீதா என்ற 67 வயது தாயார் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. இரக்கமுள்ள ஆண்டவரே! தரணிக்குளத்தில்(வன்னிப்பகுதி) இரண்டு சிறுநீரகங்களும் முற்றாக செயலிழந்த நிலையில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் அன்ரனி துஷாநந்த் என்ற இளம்மகனின் அன்றாட தேவைகள் சந்திக்கப்படவும், அவரின் உடலநிலையில் முன்னேற்றம் கிடைக்கவும் வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. வைத்தியரான இறைவா! ரொரன்ரோவில், மார்பு புற்றுநோய் காரணமாக எதிர்வரும் 4ம் திகதி சத்திரசிகிச்சை செய்யப்பட உள்ள Gloria என்ற சகோதரிக்கு சத்திரசிகிச்சை நல்லபடி நடக்கவும், பூரண குணமடையவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. அன்பான ஆண்டவரே! இந்தியாவில் வருகிற மாதம் நடக்க இருக்கும் திருமணம் உம்மால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
  6. பாதுகாக்கும் ஆண்டவரே! தனிப்பட்ட விடயமாக வெளிநாடு சென்றிருக்கும் நால்வர் நல்லபடி கனடா திரும்ப வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  7. உதவி செய்யும் ஆண்டவரே! இரண்டு பிள்ளைகளை தாய்நாட்டில் விட்டு கனடாவிற்கு வந்திருக்கும் இளம்தாய் ஒருவரின் வேலைக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  8. பலப்படுத்தும் இறைவா! அமெரிக்காவில் இருந்து எமது குழுவில் இணைந்திருக்கும் சகோதரி. சாந்தாவுக்கு வேண்டிய பலத்தை கொடுத்து குணமளிக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  9. மனதுருக்கம் உள்ள ஆண்டவரே! அமெரிக்காவில், இருதயம் சம்பந்தப்பட்ட சுகயீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் David Fisher என்ற 76வயது தகப்பனாருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.   
  10. ஒளியின் இறைவா! இருளின் ஆதிக்கத்தினால் கட்டப்பட்டு உள்ளவர்கள் விடுதலை பெற்று உமது தெய்வீக ஒளிக்குள் அவர் வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம். 

10-10-2024 விண்ணப்பங்கள்

  1. அன்பின் இறைவா! இங்கிலாந்தில், கார் மோதியதால் விலா எலும்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 21 வயது மகனுக்கு செய்ய வேண்டி உள்ள சத்திரசிகிச்சை ஏற்ற நேரத்தில், சரியாக செய்யப்பட்டு அவர் குணமடையவும், அவரோடு கூட காயப்பட்டவர்களும் குணமடைய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  2. ஏழைகளின் பெலனான இறைவா! இலங்கையில், கடந்த வாரம் கடன்பிரச்சனை காரணமாக தமது உயிரை அழித்துக் கொள்ள முயற்சி செய்த பெற்றோரும், மகனும் அற்புதமாக உயிர் தப்பி இருக்கும் வேளையில் அவர்களுக்கு எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும், கடன் தீர வழியையும்  கொடுக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. இரக்கத்தின் ஆண்டவரே! Torontoவில் சகோதரன் ஒருவருக்கு கழுத்தில் இருக்கும் கட்டி பாரதூரமான பிரச்சனைகளைக் கொடுக்காமல் கரைந்து போக வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
  4. குணமளிக்கும் ஆண்டவரே! கனடாவில்,புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் Ray என்ற சகோதரன் பூரண குணமடைந்து வீடு திரும்பவும், Giles என்ற சகோதரனுக்கு புற்றுநோய் காரணமாக குறைந்திருக்கும் இரத்த அணுக்களின் அளவு சரியான நிலைக்கு வரவும், அவரும் பூரண குணமடைய வேண்டும் என்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  5. மனதுருக்கம் உள்ள இறைவா! Kitchener வருகிற 18ம் திகதி Tony என்ற வயதானவருக்கு    face maker(இருதயத்தை இயக்கும் கருவி)பொருத்தப்பட உள்ள வேளையில், நீரே அவருக்கு வேண்டிய பலத்தையும், திடத்தையும் கொடுத்து வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  6. அரவணைக்கும் ஆண்டவரே! Kitchener இல் இரட்டைக் குழந்தைகளின் கருச்சிதைவால்(miscarriage ) மிகவும் மனமுடைந்து இருக்கும் சகோதரிக்கு ஆறுதலைக் கொடுத்து குடும்பத்திலும் அமைதியைக் கொடுக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  7. ஒளி தரும் இறைவா! கண்ணில் சத்திரசிகிச்சை(cataract)செய்துள்ள சகோதரி ஜெசிக்கு பூரண சுகத்தைக் கொடுக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  8. ஆசீர்வதிக்கும் ஆண்டவரே! இந்தியாவில், வருகிற 21ம் திகதி Aswin & Annie என்பவர்களுக்கு நடைபெற இருக்கும் திருமணத்தை நீர் முன்னின்று நடத்தி மணமக்களின் எதிர்காலத்தை  தொடர்ந்தும் இறைவழியில் நடத்த வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.  
  9. குடும்பங்களை உருவாக்கும் ஆண்டவரே! திருமண பந்தத்தில் இருவரை இணைக்க திட்டமிடும் வேளையில் உமது சித்தப்படி இந்தக் விடையத்தை வழிநடத்த வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  10. வழிநடத்தும் ஆண்டவரே! வைத்திய ஆலோசனை, உதவி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் மகள் ஒருவர், அவருக்குரிய வைத்தியரிடம் செல்லவும், தகுந்த  சிகிச்சையைப் பெற்று பூரண குணமடையவும், குடும்பத்தில் சமாதானமாக வாழவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  11. இழந்ததை பெற்றுக் கொடுக்கும் இறைவா! கனடாவில்,இரண்டு பிள்ளைகளின் தகப்பன் ஒருவர் தனக்குரிய  முக்கியமான பத்திரங்களைத் தொலைத்ததால் செய்து கொண்டிருந்த வேலையை இழந்து போன நிலையில், அவருக்கு வேண்டிய நல்ல வேலையை மீண்டும் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  12. கையிடும் வேலையை ஆசீர்வதிக்கிற ஆண்டவரே! இந்தியாவில், தனது தொழிலில் முன்னேற பெரிய காரியம் ஒன்றைத் திட்டமிடும் சகோதரனுக்கு வெற்றியைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

02-10-2024

  1. உலகம் அனைத்தையும் ஆளும் ஆண்டவரே! இஸ்ரவேல், பாலஸ்தீனத்திற்கும் மற்றும் ரஷ்யா, உக்ரைய்னுக்கும் இடையில் நடக்கும் போரினால் ஏற்படும் அழிவுகள் நீங்கி உலக சமாதானத்தை நீரே பெற்றுத்தர வேண்டுமாய், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் இறைவா! அடுத்த வருடம் திருமணத்திற்காக தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவினை நீங்கி பெற்றோரின் கவலை தீர்க்கப்படவும், திருமணம் திட்டமிட்டபடி நடக்கவும் நீர் உதவி செய்ய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இரக்கத்தின் இறைவா! இளம் குடும்பமொன்றில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் நீங்கி உறவு பலப்படவும், சமாதானத்தை ஏற்படுத்த இடையில் நின்று செயற்படும் குடும்பத்திற்கு நீர் உமது ஞானத்தைக் கொடுத்து வழிநடத்த வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. பாதுகாக்கும் ஆண்டவரே! வருகிற 22ம் திகதி தனிப்பட்ட காரியம் ஒன்றுக்காக வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ள இருப்பவர்கள் பாதுகாப்பாகவும், சுகமாகவும் கனடா திரும்ப வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  5. ஆசீர்வதிக்கும் இறைவா! தொழில்வாய்ப்பு இல்லாமையால் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு வேண்டிய வாய்ப்புக்களையும், வருமானத்தையும் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. மொன்றியோலில் வசிக்கும் ஒரு சகோதரிக்கு நல்ல உடல் சுகம் தர வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  7. இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் மகன் குடும்பத்திற்கிடையில் நல்ல புரிந்துணர்வு வளர வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

17-09-2024 விண்ணப்பங்கள்

  1. இந்தியாவில், அக்‌ஷயா என்ற இளம்மகளுக்கு தொடர்ச்சியாக இருக்கும் தும்மல், சளி இவைகளினால் மூச்சுத் திணறல் ஏற்படுவதால் சிகிச்சை செய்து கொண்டிருக்கும் வேளையில், இரக்கமுள்ள ஆண்டவராகிய நீர் பூரண சுகத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அடுத்த வருடம் தமது திருமணத்தை நடத்த இருக்கும் இளம்பிள்ளைகள் தமக்காக வீடு ஒன்றை வாங்க திட்டமிடும் வேளையில், ஆசிகளின் ஊற்றாகிய இயேசுவே, நீரே அவர்களுக்கு இருக்கும் தடைகளை நீக்கி, ஆசீர்வாதமான வீட்டைக் கொடுத்து வழிநடத்த வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. இந்தியாவில், வயிற்றில் 3ம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் கிறிஸ். ஆரோக்கியசாமி என்பவருக்கு செய்யப்படும் வைத்திய சிகிச்சைகள், குணமளிக்கும் ஆண்டவராகிய உம்மால் வழிநடத்தப்படவும், அவர் பூரண குணமடைய வேண்டும் என்றும் இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கனடாவில் உள்ள மகனின் பெற்றோர் இந்தியாவில் நடத்தும் சொந்த தொழிலினால் ஏற்பட்டிருக்கும் மனக்கவலைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை மலர வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. கனடாவில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள வாலிப பெண்ணுக்கும், மற்றொரு குடும்பத்தில் உள்ள வாலிபனுக்கும் விரைவில் ஏற்ற துணை கிடைத்து திருமணம் நடக்க வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  6. கனடாவில் புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சை செய்தும் சிறந்த பலன் கிடைக்காமல் தொடர்ந்தும் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளும் சகோதரர் ஒருவருக்கு நல்ல சுகம் தர வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  7. கனடாவில் பிரிந்து வாழும் குடும்பம் விரைவில் ஒன்றினைய வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  8. 19ஆம் திகதி வியாழக்கிமை கனடாவில் தனது உடல் பரிசோதனைக்கான வைத்தியரின் பதிலைப் பெறப்போகும் சகோதரிக்கு நல்ல ஆரோக்கியம் கிடைத்துள்ள பதில் தர வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

05-09-2024 விண்ணப்பங்கள்.

  1. சிறு குழந்தைகளை மிகவும் நேசிக்கும் இறைவா!  இந்தியாவில், அடிக்கடி வாந்தி எடுப்பதால் மிகவும் பலவீனமான நிலையில் “யோசுவா” என்ற 9 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வேளையில், உமது கரம் அவரைத் தொட்டு அவரைக் குணப்படுத்த வேண்டும் என்று “இயேசு” என்ற உமது வல்லமையுள்ள பெயரால் மன்றாடுகின்றோம்.
  2. கையிட்டு செய்யும் காரியங்களை ஆசீர்வதிக்கும் ஆண்டவரே! புதிதாக வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து இருக்கும் இளைஞன் ஒருவரின் விற்பனை வெற்றி பெறவும், அவரது எதிர்காலம் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டும் என்று “ இயேசு” என்ற உமது வல்லமையுள்ள பெயரால் மன்றாடுகிறோம்.
  3. உதவி செய்யும் இறைவா! படிப்பதற்காக கனடா வந்துள்ள “அலன்” என்ற மாணவன் வாங்கிய கார், திடீரென பழுதடைந்த நிலையில், இலவசமாக திருத்தக் கூடிய வரையறைக்குள் கார் உள்ளதா? என கார் விற்பனைநிலையம் பரிசோதித்து கொண்டிருக்கும் வேளையில் நீர் நல்ல பதிலைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று “இயேசு” என்ற உமது வல்லமையுள்ள பெயரால் மன்றாடுகிறோம். 
  4. குணமாக்கும் ஆண்டவரே! இலங்கையில் புற்றுநோய் குணப்படுத்தும் சிகிச்சைக்காக (chemotherapy pills) மாத்திரையை எதிர்வரும் 9ம் திகதி முதல் உட்கொள்ள இருக்கும் இளம்மகளுக்கு நீர் அற்புத குணமளிக்க வேண்டும் என்று “ இயேசு” என்ற உமது வல்லமையுள்ள பெயரால் மன்றாடுகிறோம்.
  5. உலர்ந்த எலும்புகளை உயிர்பெறச் செய்யும் இறைவா! முள்ளந்தண்டு பிரச்சனையால் ஏற்பட்ட கால்வலி காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் வேளையில் நீரே விரைவில் பூரண சுகத்தை கட்டளையிட வேண்டும் என்று “இயேசு” என்ற உமது வல்லமையுள்ள பெயரால் மன்றாடுகிறோம்.
  6. வழிநடத்தும் ஆண்டவரே! யாழ்ப்பாணத்தில் உள்ள தனது நிலத்தையும் பண்ணையையும் தேவை காரணமாக விற்க உள்ள சகோதரனின் முயற்சியை, நீர்  வழிநடத்த வேண்டும் என்று “ இயேசு” என்ற உமது வல்லமையுள்ள பெயரால் மன்றாடுகின்றோம்.

27-08-2021

  1. அன்பின் ஆண்டவரே! வேறு நாட்டிலிருந்து கனடா வந்திருக்கும் சகோதரி, நீண்ட காலமாக காணாத தன் சகோதரன் சிறையில் இருக்கும் வேளையில், அவரைச் சந்திப்பதற்கு இருக்கும் தடைகளை நீக்கி வழிகளைத் திறந்து கொடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இரக்கத்தின் ஆண்டவரே! இந்தியாவில் இருந்து அகதி உரிமை கோரி கனடா வந்திருக்கும் இரண்டு பிள்ளைகளின் தகப்பனின் நிரந்தர விசாவிற்காக செய்யப்படும் விடயங்களில் வெற்றி கிடைக்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. குணமாக்கும் ஆண்டவரே! மாடிப்படியில் இருந்து விழுந்து தலையில் பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் Danuta என்ற தாயார் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. தேவகளைச் சந்திக்கிற ஆண்டவரே! இந்தியாவில் கடன் பிரச்சனையினால் மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் சகோதரி ஒருவரின் கடன் தீர உதவி செய்ய வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. அற்புதம் செய்யும் ஆண்டவரே! கொழும்பில் புற்றுநோய் காரணமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்ட இளம்மகள் ஹீமோதெரபி மாத்திரை(chemotherapy pill) எடுக்க இருக்கும் வேளையில் உமது வல்லமை இந்த மகளை முற்றுமுழுதாக குணப்படுத்த வேண்டுமன்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. வாழ்வின் வழியாகிய ஆண்டவரே! நெருக்கடியான சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு வேலைக்காக வந்திருக்கும் சகோதரனுக்கு சம்பளம் விரைவில் கிடைக்கவும்,  அமெரிக்கா விசா வைத்திருக்கும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இவருடன் விரைவில் இணைந்து கொள்ள பொருளாதார நிலை ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  7. வழிகாட்டும் ஆண்டவரே! தனது எதிர்கால வளர்ச்சிக்காக  வீடு ஒன்று வாங்க விரும்பும் இளம் மகளின் முயற்சி வெற்றியளிக்க வேண்டுமன்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.

20-08-2024 விண்ணப்பங்கள்:

  1. ஏற்ற துணைகளை உருவாக்கும் ஆண்டவரே! எதிர்வரும் வாரத்தில் கனடாவில் நடக்க இருக்கும் திருமணத்தையும் மற்றும் நாகர்கோவில் இந்தியாவில் 23 ம் திகதி நடைபெற இருக்கும் டொமினிக் & ரினா திருமணத்தையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து, மணமக்களை இறைவழியில் நடத்த வேண்டுமென்று , இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பான ஆண்டவரே!  இந்தியாவில் இருந்து கனடா வருவதற்கான விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் தாயாருக்கு, விசா தாமதமாவதால் மிகவும் மனமுடைந்து இருக்கும் மகள் மனமகிழ்ச்சி அடையும்படி விரைவில் விசா கிடைக்க நீர் உதவி செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. சமாதானத்தின் ஆண்டவரே,இந்தியாவில் 23 வருடங்களாக பிரிந்திருக்கும் பெற்றோர் மீண்டும் இணைய வேண்டிய வழிகளை நீர் திறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. குணமாக்கும் ஆண்டவரே!கனடாவில், குழந்தைப் பேற்றின் பின்பு ஏற்பட்ட இடுப்பு வலியால் மிகவும் அவதியுறும் 33 வயதான மகள் பூரண குணமடைந்து, தனது குடும்ப கடமைகளைச் செய்ய நீர் உதவி செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இரக்கத்தின் இறைவா! இந்தியாவில், கொப்புளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மகன் விரைவில் குணமடையவும், அவனுக்கு ஏற்ற நல்ல வேலையும் கிடைக்க வேண்டிய வழிகளும் கிடைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  6. இரக்கமுள்ள ஆண்டவரே, கனடாவில்,அடிக்கடி வேலை மாற்றலினால் சிறு குழந்தையோடு அலைக்கழிந்து மனச்சோர்வோடு இருக்கும் குடும்பத்தின் தலைவனுக்கு ஏற்ற நிரந்தர வேலை கிடைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

13-08-2024 விண்ணப்பங்கள்

  1. குடும்பங்களை இணைத்து வைத்த ஆண்டவரே! எமது தாய்நாட்டில் இருந்து கனடாவிற்கு தனது  இரண்டு பிள்ளைகளுடன் வந்திருக்கும் இளம்தாயாருடன் இலங்கையில் இருக்கும் கணவன் இணைந்து கொள்வதற்கன விசா விரைவில் கிடைக்க உதவி செய்ய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை  மன்றாடுகிறோம்.
  2. அன்னாளை ஆசீர்வதித்த இறைவா!  நீண்டநாட்களாக குழந்தைக்காக காத்திருந்த சோனியா என்ற இளம் மகள் வருகிற செப்டம்பர் மாதம் செயற்கை கருத்தரிப்பு முறைச் சிகிச்சை (IVF) செய்ய உள்ள நிலையில் அவர்களது முயற்சி வெற்றியளிக்க உதவி செய்ய வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்பான ஆண்டவரே! இந்தியாவில்  இருந்து அகதி உரிமை கோரி  மொன்றியல் வந்திருக்கும் இரண்டு பிள்ளைகளின் தகப்பனான ஆனந்தன் என்பவர், யாருமே அற்ற நிலையில் தவிக்கும் வேளையில் அவருக்கு வேண்டிய உதவிகள் கிடைக்க நீர் வழி செய்ய வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. நெருக்கடி வேளையில் பதில் தருகிற ஆண்டவரே! மூன்று குடும்பங்கள் இக்கட்டான சூழ்நிலையில் தமது வீடுகளை விற்பனைக்காக போட்டிருக்கும் வேளையில், அந்த வீடுகள் விரைவில் விற்கப்பட்டு அவர்களின் தேவைகள் சந்திக்கப்பட உதவி செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. பயணங்களில் கூட வரும் இறைவா! கனடாவில் இருந்து எதிர்வரும்  வெள்ளிக்கிழமை  இலங்கை, இந்தியாவிற்கான பிரயாணத்தை மேற்கொள்ள இருக்கும் குடும்பம் நல்லபடியாக  நாடு திரும்ப வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

01-08-2024 விண்ணப்பங்கள்

  1. ஏழைகளைத் தூசியில் இருந்து தூக்கி நிறுத்தி உயர்குடி மக்களிடையே அமரச் செய்பவரே! இந்தியாவில்,கட்டிட பொறியியலாளராக(Civil Engineer) படிப்பை முடித்து, பயிற்சிக்காக வெளியூர் சென்றிருக்கும் மகன் வசந்தன், தனது பயிற்சியை திறமையாக செய்து எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வர நீரே அவருக்கு துணையாக இருந்து பாதுகாக்க வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. உமது திருக்காயங்கள் வழியாக குணமாக்கும் இறைவா! கை எலும்பு முறிந்ததால் (நேற்று) சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ள சகோதரன் விரைவில் குணமடைந்து தனது குடும்ப கடமைகளை புதிய பலத்தோடும், உற்சாகத்தோடும் செய்ய அற்புதம் செய்ய வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. திறக்கப்படுவதாக”(எப்பத்தா) என்று கட்டளையிட்டு நாவின் கட்டுக்களை அவிழ்த்த ஆண்டவரே! பேச்சு வளர்ச்சிக்கான பயிற்சி சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கும் 6 வயது சிறுவனுக்கு உமது வல்லமை அற்புதம் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. அன்பை வளர்க்க குடும்பங்களை உருவாக்கிய இறைவா! மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பம் ஒன்றில் கணவன் மனைவிக்கு இடையிலும், தாய் மகளுக்கு இடையிலும் அடிக்கடி ஏற்படுகின்ற பிரச்சனைகள் மறைந்து உமது அன்பில் உறுதிப்பட்ட குடும்பமாக வாழ வழி செய்ய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. “சிறுமியே எழுந்திரு” என்று உமது உயிர்ப்பின் வல்லமையால் அற்புதம் செய்த இயேசுவே! கொழும்பில், புற்றுநோயிலிருந்து குணமாகி கதிரியக்க சிகிச்சை( Radiation Therapy) செய்து கொண்டிருக்கும் இளம்மகள் உடல், மன பெலத்துடன்  சிகிச்சையை செய்து முடிக்க உதவியாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. உமது சமாதானத்தை இந்த உலகில் விட்டுச் சென்ற இயேசுவே! மூன்று பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள் மத்தியில் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலை மாறி குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவ நீரே உதவி செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

26-07-2024 விண்ணப்பங்கள்

  1. இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் எமது வழிபாட்டை நடாத்தும் அனைத்து பணியாளர்களையும், பங்கு பெறும் அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த வேண்டும் என்றும், அனைத்து குடும்பங்களும் உம்மால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும், ஆண்டவராகிய இயேசுவே உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  2. கனடாவிற்கு சுற்றுலா விசாவில் வந்த தாயாருக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக சுகாதார அட்டை(health card) வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதால், குடிவரவு அதிகாரிகளுடன்  முக்கிய சந்திப்பு  இன்று நடைபெற உள்ளது. இந்த முக்கிய சந்திப்பில் ஆண்டவர் நீர் கூட இருந்து செயலாற்றி, வெற்றியை பெற்றுத்தர வேண்டும் இயேசவே உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  3. வீட்டில்  வேலைகள் செய்யும் போது விழுந்ததினால் கை முறிந்து, புதன்கிழமை சத்திரசிகிச்சை செய்யப்பட உள்ள சகோதரனின் சத்திரசிகிச்சை நல்லபடி நடக்கவும், அவர் பூரண குணமடைந்து தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும், ஆண்டவரே உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  4. “கிறிஸ்தவன்” என்ற காரணத்திற்காக வெளிமாவட்டத்தில் படிக்க முடியாமல் தனது சொந்த இடத்தில் படிப்பதற்குரிய நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மகன் ஜோ சாம்,  நாளை(கனடா நேரப்படி இன்றிரவு 11:30 -2:30 வரை) பரீட்சை எழுத இருப்பதால், ஆண்டவர் நீர் அவருக்கு நிறைவான ஞானத்தைக் கொடுத்து வெற்றி தர வேண்டுமென்று,இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.

23-07-2023 விண்ணப்பங்கள்

  1. வல்லமையின் இறைவா! இங்கிலாந்தில், அனிலா(Anila) என்ற 20 வயது மகளுக்கு மண்டை ஓட்டுக்குள் இரத்தகொதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால்(increasing pressure with in the skull) நாளைக்கு அவருக்கு ஆரம்பிக்கப்படும் சிகிச்சைகள் சரியான முறையில் நடந்து, சத்திரசிகிச்சை எதுவும் செய்யப்படாமல் அற்புத சுகம் கிடைக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. ஒடுக்கப்படுவோருக்கு விடுதலை வாழ்வு கொடுக்கும் ஆண்டவரே! இந்தியாவில், கிறிஸ்தவன் என்ற காரணத்தால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், வெளிமாநிலத்தில் PhD படிப்பை தொடர முடியாமல், தனது சொந்த இடத்தில் மீண்டும் புதிதாக படிப்பை ஆரம்பிப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (25ம்திகதி) நேர்முகத்தேர்வு(interview) ஒன்றுக்கு செல்ல இருக்கும் வேளையில் நீரே அவருக்கு முன்சென்று சகல விடயங்களிலும் வெற்றி கொடுத்து மேன்மைப்படுத்த வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. ஞானத்தின் இறைவா! கனடாவில், நாளைக்கு (புதன்கிழமை) தனது வேலை சம்பந்தப்பட்ட பரீட்சை எழுத உள்ள சகோதரன் ஒருவருக்கு நீரே உறுதுணையாக இருந்து திறமையாக எழுதி முடிக்க உதவி செய்ய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. குணமளிக்கும் இயேசுவே! Toronto வில் தாயார் ஒருவருக்கு இருதயத்திற்கு செல்லும் இரத்தம் தண்ணீராக மாறுவதால்(சிவப்பு அணுக்களை வெள்ளை அணுக்கள் அழிப்பதால்)   அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள், சிகிச்சைகள் பலனளித்து, உடல் பலத்தோடு வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. அன்பான ஆண்டவரே! கால் வீக்கம் காரணமாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கும் சகோதரிக்கு வீக்கத்திற்கான காரணம் கண்டு பிடிக்கப்பட்டு, செய்யப்படும் சிகிச்சைகள் பலனளிக்கவும், அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  6. இரக்கமுள்ள ஆண்டவரே! முதுகு தண்டில் பிரச்சனை உள்ள சகோதரி கழுத்து  மற்றும் கைவீக்கம் காரணமாக வலியாலும் உளைவினாலும் அவதியுறும் வேளையில் உமது அற்புத கரம் அவரைத் தொட்டு குணமளிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  7. காயம் கட்டும் இயேசுவே! வயிற்றில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ள சகோதரிக்கு செய்யப்பட்ட பரிசோதனைக்கு(biopsy) நல்ல பதில் கிடைக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  8. இரக்கத்தின் இறைவா! தவறான பழக்கவழக்கங்கள், வீணான செலவுகளால் உழைப்பை விரயம் செய்யும் குடும்பத்தலைவன் ஒருவர்  மனம்திரும்பி தன் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தை கட்டியெழுப்ப உதவி செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  9. நெருக்கடியில் பதில் தரும் இறைவா! தமது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண திட்டமிடும் குடும்பம் ஒன்றின் முயற்சிகளுக்கு, நீர் வழிகாட்டியாக இருந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  10. சமாதானத்தின் தேவனே! குடும்பங்களில் உமது ஒளி எப்பொழுதும் நிறைவாக இருக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

05-07-2024 விண்ணப்பங்கள்

  1. இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் எமது வழிபாட்டை நடாத்தும் அனைத்து பணியாளர்களையும், பங்கு பெறும் அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த வேண்டும் என்றும், அனைத்து குடும்பங்களும் உம்மால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும், ஆண்டவராகிய இயேசுவே உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  2. ரொரன்ரோவில், கருத்தரிப்பதில் தடைகள் ஏற்பட்டதால் மனமுடைந்து இருக்கும் இளம்தம்பதியினருக்கு அவர்கள் மனவிருப்பப்படி குழந்தைச் செல்வத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  3.  பேச்சுத்திறன் இல்லாமல் இருக்கும் சிறுவனுக்கு செய்யப்பட உள்ள சிகிச்சைகள், பயிற்சிகளில் உமது அற்புத வல்லமை வெளிப்பட்டு, அவனின் வாயின் கட்டுக்கள் அவிழ்க்கப்பட வேண்டும் என்றும் அவன் சரளமாக பேச வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அமெரிக்காவில்,குடல் புற்றுநோய் காரணமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் 65 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவருக்கு  சிகிச்சைகள் தொடர்ச்சியாக செய்ய வேண்டி இருப்பதால், அவரை ஆண்டவர் நீரே முற்றுமுழுதாக பொறுப்பெடுத்து வழிநடத்த வேண்டும் என்று மன்றாடுகின்றோம்.
  5. கர்ப்பப்பையில் நோய் உள்ள சகோதரிக்கு July 19ஆம் திகதி நடைபெறவுள்ள வைத்திய பரிசோதனையில் நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்றும், அவரது நோயிலிருந்து பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்றும், மற்றும் அவர்களின் கடன் பிரச்சனை தீர வேண்டுமென்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. இருதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் செய்த தாயாருக்கு நல்ல பதில்கள் கிடைக்க வேண்டும் என மன்றாடவும்.
  7. கடன் பிரச்சனையினால் அல்லலுறும் சகோதரி ஒருவரினது கடன் தீர வேண்டும் என்றும், கடன் சுமையோடு போராடும் அனைவரினதும் கடன்கள் தீர  வழிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  8. தனது வாழ்வை இறைபணியில் முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்த சகோதரி ஒருவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் இழப்பினாலும் மற்றும் பொருளாதார நெருக்கடியினாலும் மிகவும் பலவீனப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் அவருக்கு உடல் மனபெலன் நிறைவாக கிடைக்கவும், தனது பணியை உற்சாகமாக தொடரவும் வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  9. வேலை செய்யும் இடத்தில் பாரமான பொருள் ஒன்று தலையில் விழுந்ததால் சுகயீனமாக இருக்கும் 60 வயதான தகப்பனார் ஒருவருக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம். 
  10. இளம்பிள்ளைகள் இருவர் எதிர்காலத்திற்கான சரியான முடிவுகளை இறைசித்தப்படி எடுக்க உதவி செய்ய வேண்டும் என இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

21-06-2024 விண்ணப்பங்கள்

  1. இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் எமது வழிபாட்டை நடாத்தும் அனைத்து பணியாளர்களையும், பங்கு பெறும் அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த வேண்டும் என்றும், அனைத்து குடும்பங்களும் உம்மால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும், ஆண்டவராகிய இயேசுவே உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  2. எமது தாயகத்தில், 12 குடும்பங்களை பங்குமக்களாக கொண்ட தேவாலயம் ஒன்றின் அத்தியாவசிய திருத்த வேலைகளுக்கான தேவைகள் சந்திக்கப்பட வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இரும்புசத்து குறைபாட்டுக்காக  மாத்திரை எடுத்தும் அளவு கூடாமல் பலவீனமாக இருக்கும் இளம்தாயார் குணமடைய வேண்டும் என்றும், இரும்புச்சத்து குறைபாடுள்ள அவரது மகளுக்கும் சரியான அளவுக்கு இரும்புச்சத்து வர வேண்டுமென்றும், இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கோடைகால விடுமுறைக்கான பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, மனநிறைவோடு நாடு திரும்ப வேண்டுமென்று,இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. குடும்பங்களில் பெற்றோர்,பிள்ளைகள், கணவன், மனைவி மற்றும் உறவுகளுக்கு இடையில் நல்ல உறவும், புரிந்துணர்வும், ஒருமைப்பாடும் நிலவ வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் குடும்பங்களின் வருமானங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, தேவைகள் நிறைவாக சந்திக்கப்பட வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  7. உணவு உண்ணும்போது புரைக்கேறியதால் உயிரிழந்த 38 வயதின் சடுதியான மறைவினால் துயருறும் பெற்றோர்களுக்கு நீர்தாமே ஆறுதலைக் கொடுத்து, அவரது இறுதி நிகழ்வுகள் அவர்களது தாய்நாட்டில் நடப்பதற்கு நீர் கூட இருந்து வழிநடத்த வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.

07-06-2024 விண்ணப்பங்கள்:

  1. இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் எமது வழிபாட்டை நடாத்தும் அனைத்து பணியாளர்களையும், பங்கு பெறும் அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த வேண்டும் என்றும், அனைத்து குடும்பங்களும் உம்மால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் ஆண்டவராகிய இயேசுவே, உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  2. நான்கு பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதா? என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தை  நீர் பாதுகாத்து சமாதானத்திற்கான வழிகளைக் காட்ட வேண்டும் என, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. மூன்று பிள்ளைகளின் பெற்றோருக்கு இடையில் புரிந்துணர்வு, மன ஒற்றுமை நிலவி சமாதானமாக இறைஒளியில் வாழ வேண்டும் என,ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. பிபியானா என்ற தாயாருக்கு காலில் புண் காரணமாக செய்யப்படவுள்ள சத்திரசிகிச்சை நல்லபடி நடந்து பூரண சுகம் கிடைக்க வேண்டும் என, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. இடுப்பு எலும்பு தேய்மானம் காரணமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ள Piragasi என்ற தாயாருக்கு பூரண சுகம் கிடைக்க வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

30-05-2024 விண்ணப்பங்கள்

1. இந்தியாவில், உடலில் இரத்தம் மிகவும் குறைவாக உள்ள காரணத்தால் மிகவும் பலவீனமாக இருக்கும் மகள் விரைவில் பூரண குணமடைந்து தனது அன்றாட கடமைகளை செய்ய நீரே உதவி செய்ய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மையே மன்றாடுகின்றோம்.

2. எதிர்பாராத வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட இளைஞனின் வழக்கு உமது பார்வையில்  நீதியாக நடைபெறவும், இதனால் மிகவும் மனமுடைந்து போயிருக்கும் பெற்றோருக்கு மன ஆறுதல், சமாதானம் கிடைக்கவும் வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

3. கனடாவில், தமது மகள் படித்துக் கொண்டிருக்கும் இடத்தில் வீடு வாங்குவதற்கு முயற்சி செய்யும் குடும்பத்திற்கான ஆசீர்வாதமான வீடு கிடைக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

4. வீடு விற்க திட்டமிடும் இரண்டு குடும்பங்களின் வீடு நல்ல விலைக்கு விற்கப்பட்டு அவர்களின் தேவைகள் நிறைவாக்கப்பட வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.

5. மருத்துவ தாதியாக பணிபுரியும் 24 வயது  மகளுக்கும், திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோரின் மனவிருப்பம் நிறைவேற வேண்டுமென்றும், தமது பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்காக மன்றாடும் அனைத்து பெற்றோரின் கவலைகளை நீர் மாற்ற வேண்டும் என்றும், ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

6. கனடாவில் வதிவிடம் கோரி விண்ணப்பித்த இளம்பெண் ஒருவரின் வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் மேன்முறையீட்டுக்கு ஏற்ற வழக்கறிஞர் கிடைக்கவும், அவருக்கு வதிவிட உரிமை கிடைக்கும் வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.

7. இதய நோயால் பாதிக்கப்பட்டு pacemaker பொருத்தப்பட்டுள்ள தகப்பனார் ஒருவர் குணமடைய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். 

10-05-2024 விண்ணப்பங்கள்

  1. இந்தியாவில், dialysis(இரத்த சுத்திகரிப்பு) செய்து கொண்டிருக்கும் தாயார் ஒருவருக்கு  அதற்கான சத்திரசிகிச்சை ஒன்று நாளை செய்யப்பட உள்ளது. அன்பான ஆண்டவரே! இந்த சத்திர சிகிச்சையில் நீரே கூட இருந்து எல்லாவற்றையும் சரியாக செய்து, அவரை பலப்படுத்தி வழிநடத்த வேண்டும் என்று உம்மிடம் மன்றாடுகின்றோம்.
  2. இரக்கமுள்ள ஆண்டவரே! கொழும்பில், பிறப்பிலிருந்தே வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் இருந்த முதியவர் இப்பொழுது கோமா நிலையில் இருப்பதால், அவருக்கு உமது இரக்கமும் கருணையும் நிறைவாக கிடைக்க வேண்டும் என்று உம்மிடம் இரந்து மன்றாடுகின்றோம். 
  3. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அதிக கோபம், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பெற்றோரும் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். இரக்கத்தின் இறைவா! இந்தப் பிள்ளைகளை நீரே பாதுகாத்து, குணப்படுத்தி, சரியான பாதையில் வழிநடத்தி ஆசீர்வதிக்க வேண்டும் என்று உம்மிடம் மன்றாடுகிறோம்.
  4. இந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு செல்ல உள்ள மகள் ஒருவர் சரியான தீர்மானங்களை எடுக்கவும், அவர் செல்லும் இடங்களில் பாதுகாப்புடன், நிறைந்த ஞானத்துடன் தனது படிப்பில் கவனமாக இருந்து செயற்பட வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இரக்கத்தின் இறைவா! ADHD(அதிக அவசரம் மற்றும் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியாமை) குறைபாடுள்ள இளைஞன் ஒருவருக்கு இருக்கும் சகல தடைகளும் நீங்கி அவதானம், பொறுமையோடு தனது எதிர்கால சிறப்பை பெற்று வாழ வேண்டுமாய் உம்மிடமே மன்றாடுகிறோம்.
  6. நேற்றைய நாளில் எமது தாய்நாட்டுக்கு இரண்டு வார காலப் பயணத்தை இக்கட்டான ஒரு சூழ்நிலையில் மேற்கொண்டுள்ள கணவனும் மனைவியும் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக மீண்டும் கனடா திரும்பி வர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  7. இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் எமது வழிபாட்டை நடாத்தும் அனைத்து பணியாளர்களையும், பங்கு பெறும் அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த வேண்டும் என்றும், அனைத்து குடும்பங்களும் உம்மால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் ஆண்டவராகிய இயேசுவே, உம்மிடம் மன்றாடுகின்றோம்.

03-05-2024 விண்ணப்பங்கள்

  1. அன்பான ஆண்டவரே! இந்தியாவில், பெற்றோருக்கு  ஒரே மகனான, யோசுவா என்ற 8 வயது சிறுவன் தொடர்ச்சியான காய்ச்சல் காரணமாக சரியாக சாப்பிட முடியாமல் biscuits மட்டும் சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இதனால்  உடல்நிறை அதிகளவில் குறைந்துள்ள இந்த மகன் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என உம்மையே மன்றாடுகின்றோம்.
  2. இரக்கத்தின் இறைவா! இலங்கையில், பக்கவாதம் வந்துள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதியவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று உம்மையே மன்றாடுகின்றோம்.
  3. புற்றுநோய்க்கான சிகிச்சை செய்து கொண்டிருக்கும் இளம்மகள் ஒருவருக்கும், அவரது பெற்றோருக்கும் உதவியாக இருக்கும் சகோதரி ஒருவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அவர் திரும்பவும் இவர்கள் வீட்டிற்கு வர வழிகளைத் திறக்க வேண்டுமாய் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
  4. Australia வில் தங்கள் 14 வயது மகனை இழந்துள்ள பெற்றோருக்கும் உறவினருக்கும் நீரே ஆறுதலைக் கொடுத்து தேற்ற வேண்டுமாய் இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

27-04-2024விண்ணப்பங்கள்

  1. மே மாதம் 5ம் திகதி கல்வி சம்பந்தமான, 3 மாதகால செயற்திட்டம் ஒன்றுக்காக வெளிநாடு செல்ல இருக்கும் இளம்மகள் ஒருவரும் அவரோடு கூட பயணிக்கும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக சென்று நல்லபடி கனடா திரும்பி வர வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இலங்கையில் காய்ச்சல் தொற்றினால் கண்பார்வை பாதிக்கப்பட்டு இருக்கும் இளைஞன் ஒருவர் பூரண குணமடைந்து பழைய நிலைக்கு பார்வை திரும்ப வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. கர்ப்பிணியாக இருக்கும் மனைவியைப் பார்க்க செல்ல விசாவிற்காக காத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்பாக விசா வந்து சேர வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. உடல்நலக் குறைவோடு இருக்கும் தாயார் ஒருவரின் மனக்குறைகள் தீர்க்கப்படவும், முக்கியமாக அவரது மகனின் எதிர்காலத்திற்கு ஏற்ற துணை விரைவில் கிடைக்க வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இன்று நடைபெற இருக்கும் எமது குழுவின் வழிபாட்டையும்,பணியாளர்களையும் மற்றும் பங்குபெறும் அனைவரையும் பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

19-04-2024 விண்ணப்பங்கள்

  1. இரக்கத்தின் இறைவா! கொழும்பில், கடந்த வாரம் அறுவைச் சிகிச்சை செய்த சகோதரிக்கு செய்யப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பாதுகாக்கும் ஆண்டவரே! புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சை செய்யப்பட்டவர்கள் பூரண குணமடைந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. வல்லமையின் ஆண்டவரே! வருகிற திங்கட்கிழமை 7வது தடவையாக புற்றுநோய்க்கான மருந்து(chemotherapy) கொடுக்கப்பட உள்ள மகளுக்கு பலத்தையும், மனத்தைரியத்தையும் கொடுத்து எதிர்விளைவுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அன்பின் ஆண்டவரே! கொழும்பில் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியரால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இளம் தகப்பனுக்கு உமது ஆறுதலும், அரவணைப்பும் நிறைவாக கிடைக்க வேண்டுமென்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம். 
  5. குணமாக்கும் ஆண்டவரே! அறுவைச்சி கிச்சை செய்த சகோதரிக்கு இருக்கும் செமிபாட்டுப் பிரச்சனை மற்றும் தொடர்ச்சியான வலியில் இருந்து பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. இருளின் மத்தியில் ஒளியாக வருபவரே,பிரான்ஸில்  விபத்தொன்றைச் சந்தித்து மூன்று பிள்ளைகள் இறந்துள்ள நிலையில் கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள   பெற்றோரை உமது கையில் தருகிறோம். உமது வல்லமையும், வழிநடத்துதலும் அவர்களோடு கூட இருக்க வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  7. சிறு பிள்ளைகளை நேசிக்கிறவரே! கனடாவில் Emri. Ananthakumar என்ற ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நாக்கு தாடையோடு ஒட்டப்பட்டு இருப்பதால், சாப்பிட முடியாமல் சரியாக சுவாசிக்கவும் முடியாமல் இருக்கிற நிலையில் அந்த குழந்தைக்கு வேண்டிய சிகிச்சைகள் சரியாக செய்யப்படவும், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள பெற்றோருக்கு மன உறுதியும், இறைநம்பிக்கையும் பெருக வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  8. அற்புதம் செய்பவரே! குடும்பத்தில் ஏற்பட்டுள்ள நோய்கள், பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் உமது கரம் தொட்டு அற்புதசுகத்தை கொடுக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  9. அமைதியின்ஆண்டவரே! குடும்பங்களில் இருக்கும் உடல், மன ஆரோக்கிய குறைவுகள் நீங்கி கணவன், மனைவிக்கிடையில் அன்பும் ஒற்றுமையும் நிறைவாக கிடைத்து, பிள்ளைகளை இறைவழியில் நடத்த வேண்டும் என்று, இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.  
  10. எமது குழுவின் பணியாளர்கள் மற்றும் பங்குபற்றும் அனைவரையும் இவர்களின் குடும்பங்களையும் நீரே பாதுகாத்து வழிநடத்த வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

02-04-2024 விண்ணப்பங்கள்

  1. இந்தியாவில், கண் பார்வை குன்றியதாலும் நடக்க முடியாமலும் மிகவும் கஷ்டப்படும் விக்டர் என்ற சகோதரன் பூரண குணமடைந்து வருகிற மாதம் நடைபெற உள்ள அவரது மகனின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இலங்கையில், இன்று சிறிய கட்டி ஒன்றை அகற்றுவதற்காக அறுவைச் சிகிச்சை செய்ய உள்ள சகோதரி பூரண குணமடையவும், பரிசோதனைகளுக்கு நல்ல பதில் கிடைக்கவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. மொன்றியலில், சிறுநீரக பிரச்சனை காரணமாக dialysis செய்யத் தொடங்கி உள்ள தாயார் ஒருவரை சரியான வழியில் நடத்த வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. கொழும்பில், புற்றுநோயைக் குணப்படுத்த நேற்று 6வது தடவையாக chemotherapy செய்துள்ள இளம்மகளுக்கு உடல், மன பலத்தைக் கொடுத்து பக்கவிளைவுகளால் பாதிக்கப்படாமல் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. கனடாவில், சுவாசப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவருக்கு சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சிகிச்சைகள் சம்பந்தமாக சரியான முடிவுகளை எடுக்க நீரே உதவி செய்ய வேண்டும் என்றும் அவருக்க வேண்டிய உடல், மன பலத்தைக் கொடுக்க வேண்டும் என்றும்  ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. இந்தியாவில், வெடி வெடிக்கும் போது கண்ணில் பட்டதால் கண்பார்வை இழந்துள்ள நிலையில் இருக்கும் கமலேஷ் என்ற சிறுவனுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும் என்றும், ஏழ்மை நிலையில் இருக்கும் அவரின் வைத்திய செலவுகளுக்கான தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. கனடாவில், 30 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் வசிக்கும் தாயும் இரண்டு பிள்ளைகளும் இலங்கையில் இருக்கும் நிலத்தை விற்று, இங்கு சொந்த வீடு வாங்குவதற்கு இருக்கும் தடைகளை அகற்றி நல்லபடியாக நிலம் விற்கப்படவும் அவர்களுக்கு சொந்த வீடு கிடைக்கவும் வழிகளைத் திறக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  8. இங்கிலாந்தில், குடும்பம் ஒன்று சந்தித்துள்ள பிரச்சனையில் இருந்து முற்றுமுழுதாக விடுவிக்கப்படவும் இயேசுவுக்கு தங்களை ஒப்புக் கொடுத்து வாழவும் வரமருள வேண்டுமென்றும், இயேசுவே உம்மையே மன்றாடுகின்றோம்.

21-02-2024 விண்ணப்பங்கள்

  1. கனடாவில், வாடகை வீட்டில் இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் தாயாரை ஒரு மாத கால அவகாசத்தில் வேறு வீட்டிற்கு போகும்படி உரிமையாளர் கூறி இருப்பதால் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். திக்கற்றவர்களுக்கு இரக்கம் காட்டும் ஆண்டவரே! உம்மையே முற்றுமுழுதாக நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தாய்க்கு அமைதியாக, சமாதானமாக வாழ்வதற்கு ஒரு ஆசீர்வாதமான வீட்டைக் கொடுக்க வேண்டுமாய் உம்மையே இரந்து மன்றாடுகிறோம்.
  2. கனடாவில், வேண்டாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி வீட்டை விட்டு வெளியேறிய கணவனாலும், பொறுப்பற்ற பிள்ளைகளாலும் எந்த உதவியும் இல்லாமல் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்படும் தாயாருக்கு சூழ்நிலைகள் மாறி மனநிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. கனடா வருவதற்காக விசா ஒருமுறை நிராகரிக்கப்பட்ட குடும்பத்தினர், மீண்டும் முயற்சி செய்வதற்கு சரியான வழிகளை காட்டி விசா கிடைக்க உதவி செய்ய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. சொந்த வியாபாரம் ஒன்றின் நடைமுறைகள் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டு முன்னேற்றப் பாதையின் அடுத்த நிலைக்கு சென்று ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும், அதில் பணிபுரியும் மற்றும் நடத்துகிற அனைவருக்கும் நீரே ஞானத்தைக் கொடுக்க வேண்டும் என்றும், ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. இங்கிலாந்தில் April 8ம் திகதி நடக்க உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், வழக்கை நடத்த இருக்கிற வழக்கறிஞர், நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் நீர் வழிநடத்தி அற்புதம் செய்ய வேண்டும் என்றும், ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. நாளை, Waterloo வில் நடைபெற உள்ள எமது செபவழிபாடும், வருகிற வெள்ளிக்கிழமை Scarborough வில் நடக்க உள்ள திருவிழிப்பு வழிபாடும் பலருக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று  ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

விண்ணப்பங்கள் – 19-03-2024

  1. இங்கிலாந்தில், தந்தையை இழந்த 23 வயது இளம்பெண் ஒருவர் திடீரென நடக்க முடியாமல் 2 வருடங்களாக சக்கரநாற்காலியில்(wheel chair) நடமாடிக் கொண்டிருந்த வேளையில், அவரைப் பராமரித்துக் கொண்டிருந்த தாயார் வதனிக்கும் 4ம் நிலை மார்பக புற்றுநோய் (fourth stage breast cancer) என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் ஒருபக்கம் அறுவைச் சிகிச்சை செய்து எடுத்துள்ளார்கள். அடுத்த பக்கமும் நீக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதால் உதவி அற்ற நிலையில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அன்பான இறைவா, இவர்கள் இருவரின் நிலையையும் நீர் மட்டுமே மாற்ற முடியும். உம்மாலே இவர்கள் பூரண குணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு உம்மிடம் இந்த மன்றாட்டை ஒப்புக் கொடுத்து மன்றாடுகிறோம்.
  2. இங்கிலாந்தில், வேலை செய்யும் போது கையில் எண்ணெய் ஊற்றுப்பட்டதால் ஆழமாக தசை வெந்து சிகிச்சை செய்து கொண்டிருக்கும் இளம் தகப்பனார் ஒருவருக்கு சரியான சிகிச்சை செய்யப்படவும், அவர் விரைவில் குணமடைந்து  தனது குடும்ப பொறுப்புக்களை கொண்டு நடத்த வேண்டிய வருமானத்தை பெற்றுக் கொள்ளவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. கொழும்பில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு இரத்த அணுக்களின் அளவு குறைந்தும் வாய்ப்புண்களினாலும் பலவீனமாக இருக்கிற நிலையில் அவருக்கு உடல், மன பலத்தை கொடுக்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. தொடர்ச்சியான பிரச்சனைகளால் கண்ணீரோடு இருக்கும் கணவனை இழந்த தாய் ஒருவருக்கு சமாதானமும் ஆறுதலும் கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. வேண்டாத பழக்க வழக்கங்களினாலும், இறைபயம் இல்லாமையினாலும் மனைவியையும் பிள்ளைகளையும்  மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் தகப்பன் ஒருவன் மனமாற்றம் அடைந்து குடும்பத்தை ஆசீர்வாதமாக கட்டி எழுப்ப வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. இறுதிப்பரீட்சை எழுதுவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் மகள் நயோமியும் மற்றும் அனைத்து மாணவ மாணவிகளும் இறைஞானத்துடன் திறமையாக பரீட்சையை எழுதி சித்தியடைய வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7.  பல வருடங்Lகளாய் lupus என்ற தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டதால் கர்ப்பம் தரிப்பதில் சவால்களைச் சந்திக்கும் இளம்பெண் அற்புத சுகம் பெற்று குழந்தைச் செல்வங்களைப் பெற்று வாழ வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  8. குடும்பத்தலைவனை இழந்துள்ள நிலையில் வீடு வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு தாய்க்கும் மகளுக்கும் ஏற்ற ஆசீர்வாதமான வீடு விரைவில் கிடைக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  9. உடல் பலவீனம், இருதயப் படபடப்பு மற்றும் மூச்சு எடுப்பதற்கு கஷ்டப்படும் தாயார் ஒருவருக்கு அற்புத சுகம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணப்பங்கள் 28-02-2024

  1. கொழும்பில், புற்றுநோய் காரணமாக chemotherapy செய்து கொண்டிருக்கும் இளம்மகளுக்கு வாய், காதுப் பகுதியில் வந்துள்ள புண்களினால் உணவருந்தவோ கழுத்து திருப்பவோ முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையிலிருந்து  நீர் பூரண சுகம் கொடுக்க வேண்டும் என்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. கனடாவில், தாதியாக பணியாற்றும் தகப்பனார் ஒருவர் முள்ளந்தண்டு arthritis காரணமாக மிகவும் வலியோடு வேலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு தேவையான சிகிச்சைகள் உமது வழிநடத்தலோடு கிடைக்கவும் புதிய பலத்துடன் அவர் குடும்பத்தை கொண்டு நடத்தவும் வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. Waterloo வில் தாதியாக பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்கு தொடர்ச்சியான வயிற்று எரிவு, சமிபாட்டுக் குறைவு, வாந்தி போன்றவைகளால் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதில் இருந்து பூரண குணம் பெற வழிகளைக் காட்ட வேண்டுமாய் இயேசுவே உம்மை மன்றாடுகிறோம். 
  4. இந்தியாவில், மாதவிடாய் காலத்து இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பலவீனமாக உள்ள இளம்மாணவி சுகமடைந்து ஆரோக்கியத்தடன் தன் படிப்பை நல்லபடி தொடர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  5. சிறுமி ஒருவருக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக மலச்சிக்கல் ஏற்படுவதால் வயிற்று நோவினால் அடிக்கடி சிரமப்படுகிறார். இவருக்கு நீரே குணமளிக்கும் ஆண்டவராக இருந்து சுகம் கொடுக்க வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. திருமண வயதில் இருக்கும் பிள்ளைகள் திருமணத்தை தள்ளிப்போடுவதால் மிகுந்த துயரத்தில் இருக்கும் பெற்றோரின் துக்கங்கள் சந்தோசமாய் மாற நீர் அற்புதம் செய்ய வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  7. இந்தியா, தமிழ்நாட்டில் அண்மையில் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட Rev. Dr. Albert Anastas, தனது அழைப்பின் அர்ப்பணிப்பினால் இறைவனுக்கும் இறைமக்களுக்கும் பணியாற்ற வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

20-02-2024 விண்ணப்பங்கள்

  1. ஆறுதலின் இறைவா! ரொறன்ரோவில் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்த 48 வயதான இளம்தாயாரின் ஆன்மா உமது சமூகத்தில் அமைதியாக இளைப்பாறவும், அவரின் இழப்பினால் தவிக்கும் கணவன், மகள், பெற்றோர் மற்றும் உறவுகள் அனைவரையும் நீர் ஆற்றித் தேற்ற வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். ஆமேன்!
  2.  உடைந்த உள்ளங்களை குணமாக்கும் ஆண்டவரே! கனடாவில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கடன் பிரச்சனை காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். இவரின் கடன்கள் தீரவும், மன ஆரோக்கியம் நிறைவாக கிடைக்கவும் நீர் உதவி செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். ஆமேன்!
  3. குணமளிக்கும் ஆண்டவரே! குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள  ஒருவருக்கு செய்யப்படும் சிகிச்சைகள் உமது துணையோடு சரியான முறையில் செய்யப்பட்டு அவர் பூரண குணமடையவும், உமக்கு நன்றி சொல்லவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமேன்!
  4. பயணத்தில் கூட வழி நடக்கிற இறைவா! 30 ஆண்டுகளுக்கு பின்பு தாய்நாட்டுக்கு முக்கிய காரணம் ஒன்றுக்காக செல்ல திட்டமிடும் குடும்பம் ஒன்றை உமது சித்தப்படி வழிநடத்த வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். ஆமேன்!
  5. ஆசீர்களின் ஊற்றான இறைவா! இங்கிலாந்தில் புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்திருக்கும் இருவரையும், வியாபாரத்தையும் நீர் வழிநடத்த வேண்டுமென்று ஆண்டவரே உம்ம மன்றாடுகின்றோம். ஆமேன்!
  6. அன்பின் இறைவா புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மூன்று நபர்கள் இயேசுவின் தழும்புகளால் பூரண சுகம்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணப்பங்கள் 16-02-2024

  1. Waterlooவில், 3 வயதுக் குழந்தை ஶ்ரீநிகாவிற்கும் அவளின் பெற்றோருக்கும் ஒன்றுவிட்டு ஒரு கிழமை காய்ச்சல் வந்து கொண்டிருப்பதால் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். குணமளிக்கும் இறைவா, ஶ்ரீநிகாவுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து அவளிடமிருந்து பெற்றோருக்கும் தொற்றாதபடி பாதுகாக்கவும், காய்ச்சலைக் குணப்படுத்தவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். ஆமேன்!
  2. பேதுருவின் மாமியாரின் காய்ச்சலை சுகமாக்கிய ஆண்டவரே! நிமோனியா காய்ச்சல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரையும் உமது வல்லமையான கரம் தொட்டு அற்புத சுகம் கொடுக்க வேண்டும் என்று இறைவா உம்மையே மன்றாடுகிறோம். ஆமேன்!
  3. இங்கிலாந்தில், தனது இரண்டாவது குழந்தையை பிரசவித்துள்ள Mary Annet என்ற இளம்தாயார் ஒரு மாதமாகியும் நடக்க முடியாமல், குழந்தை அழும்போது தூக்கவும் முடியாமல் இருக்கிறார். இதனால் வேலைக்கு செல்லும் கணவனும் மற்ற குழந்தையும்     மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். நடக்க முடியாதவர்களை எழுந்து நடக்கும்படியாக அற்புதம் செய்த இயேசுவே! விரைவில் இந்த இளம்தாயாரின் துன்ப நிலையை மாற்றி பூரணசுகம் கொடுக்க வேண்டும் என்று உம்மையே மன்றாடுகிறோம். ஆமேன்!
  4.  இரக்கத்தின் ஆண்டவரே! கொழும்பில், புற்றுநோய்க்கான சிகிச்சை செய்து கொண்டிருக்கும் இளம்மகள் வருகிற திங்கட்கிழமை 4 வது தடவையாக hemotherapyக்கு போக உள்ளார். இந்த சிகிச்சையினால் வாந்தி எடுத்து பலவீனமாக இருக்கும் இவர், இந்த முறை தைரியமாக சிகிச்சையை எதிர்கொண்டு விரைவில் அவருக்கு இருக்கும் கட்டியை வைத்தியர்கள் எடுக்கவும்,  உமது தழும்புகளால் பூரண சுகம் கிடைக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம். ஆமேன்!
  5. இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிய செல்ல ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கும் இளம்மகன் ஒருவருக்கு,  எந்த தடைகளும் வராமல்  எல்லா காரியங்களிலும் நீர் உதவி செய்ய வேண்டுமென்று, வெற்றியின் ஆண்டவரே  உம்மையே மன்றாடுகிறோம். ஆமேன்!
  6. வழிநடத்தும் ஆண்டவரே! தங்களின் விடுமுறைக்காக பயண ஒழுங்குகளை முன்கூட்டியே செய்துள்ள குடும்பம் ஒன்றின் பயணத்தில், எதிர்பாராமல் வந்துள்ள இடையூறுகள் சரிப்படுத்தப்பட்டு இந்த பயணத்தில் நீர் கூட இருந்து வழிநடத்த வேண்டுமென்றும் இந்த குடும்பம் மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழித்து வர வேண்டும் என்றும், இறைவா உம்மையே மன்றாடுகிறோம். ஆமேன்!
  7. மனதுருக்கமுள்ள ஆண்டவரே, கழுத்து மற்றும் தாடை, பல் போன்ற பகுதிகளில் வலியால் அவதியுறும் தகப்பன் ஒருவருக்கு எந்த சத்திரசிகிச்சையும் செய்யாமல்  அற்புதமாய் சுகம் கொடுக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமேன்!

13-02-2024 விண்ணப்பங்கள்

  1. அன்பான ஆண்டவரே! பித்தப்பை (gall bladder) சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் சகோதரி சமிபாட்டு பிரச்சனை, வலி காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் விரைவில் அவருக்கு பூரண சுகம் கொடுத்து மீண்டும் தனது கடமைகளைச் செய்ய பெலன் கொடுக்க வேண்டுமென்று உம்மை நோக்கி மன்றாடுகிறோம்.
  2. நம்பிக்கையின் இறைவா! சுவாசிக்கும் போது oxygen உட்கொள்ளப்படுதல்  குறைவினால் இரவில் அடிக்கடி நித்திரை குழம்பி உடல் அயர்வு, சோர்வினால் சிகிச்சைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கும் சிறுவன் குணமடைய வேண்டுமென்று உம்மை நோக்கி மன்றாடுகிறோம்.
  3.  துணை செய்யும் ஆண்டவரே! ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கணவன், மனைவி மற்றும் தாயை இழந்திருக்கும் அவர்களது பேரன் கனடா வருவதற்கு முயற்சி செய்யும் போது, மனைவியோ உடல்நிலை மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார். இவர் பலமடைந்து விசாவுக்குரிய காரியங்களை செய்து முடித்து, கனடாவில் கணவனையும் மகனையும் இழந்துள்ள தங்களது இன்னொரு மகளிடம்  வந்து சேர வேண்டும் என்று உம்மிடம் வேண்டி நிற்கிறோம்.
  4. பாதுகாக்கும் இறைவா!  நடுத்தர வயதுள்ள நான்கு பிள்ளைகளின் தகப்பனுக்கு இருதயதுடிப்பு சரியாக இல்லாத காரணத்தால் pace maker பொருத்தப்பட உள்ள சூழ்நிலையில் அவருக்கு செய்யப்படும் சிகிச்சை நடைமுறைகள் சரியான முறையில் செய்யப்பட்டு வெற்றியளிக்க வேண்டுமென்று உம்மையே வேண்டுகிறோம்.
  5. இரட்சிப்பின் தேவனே! ரொரன்ரோவில் திடீரென ஏற்பட்ட சுகயீனத்தால் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டிருக்கும் நடுத்தர வயது தகப்பனுக்கு சுகத்தையும், உம்மை அறியும் அறிவைக் குடும்பத்திற்கும் கொடுத்து வாழ வைக்க வேண்டுமாய் மன்றாடுகிறோம்.
  6. குணமளிக்கும் ஆண்டவரே! இலங்கையில் பெருமளவு பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் பெலனடையவும் வேண்டுமென்று உம்மிடம் இரந்து மன்றாடுகிறோம்.  
  7. அமைதியின் இறைவா!  குடிப்பழக்கம் காரணமாக வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்  குடும்பத்தலைவன் ஒருவர் வேலையிடத்தில் ஒற்றுமையாக இருக்கவும், குடிப்பழக்கத்தை விட்டு மனம் திரும்பவும் வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
  8. ஒன்ராரியோவின் குடும்ப விடுமுறை நாளில் ஒவ்வொரு குடும்பங்களிலும் உமது பிரசன்னமும், அன்பும், ஒற்றுமையும் நிலவி அனைவரும் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  9. சிறு குழந்தைகளை நேசிக்கின்ற அன்பு இறைவா!ரொரன்ரோவில்  சிறுமி ஒருவருக்கு வயிற்று நோவின் காரணம் கண்டறிய இன்று  பரிசோதனை( ultrasound) செய்யப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் நல்லபடி வரவேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.

30-01-2024 விண்ணப்பங்கள்

  1. நீதியின் ஆண்டவரே! ஐரோப்பாவில், வாகன தரிப்பிடத்தில்  வாகனத்துக்குள் இருந்தபடி அலைபேசியை(mobile phone) பயன்படுத்திய வாலிபனுக்கு, உண்மைக்கு புறம்பான காரணம் காட்டப்பட்டு தற்காலிகமாக 6 மாத காலத்துக்கு வாகனம் ஓட்டும் அனுமதியை இரத்து செய்துள்ளார்கள். தொலைதூரத்திற்கு தினமும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த மகனுக்கு விரைவில் நீதி கிடைத்து அவர் திரும்பவும் வாகனத்தை செலுத்த வழி திறக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. கனடாவில், இளம் பெற்றோரின் குடும்பம் ஒன்றில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவும், அதை இருவரும் ஏற்று பிள்ளைகளின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உமது வழியில் நடக்கவும், அன்போடும் அக்கறையோடும் தமது குடும்ப உறவைக் கட்டியெழுப்பி வாழ உதவி செய்ய வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

17-01-2024 விண்ணப்பம்
ஆறுதலின் இறைவா! அமெரிக்காவில் மனக்குழப்பத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த 28 வயதான ரிஷி என்ற வாலிபனை சடுதியாக இழந்து பெற்றோர் மற்றும் உறவுகள் தவித்து நிற்கிறார்கள். இந்த மகனின் ஆன்மா உமது சமூகத்தில் நித்திய இளைப்பாறுதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இவரது தம்பி ஆரூரன் என்பவருக்கு கண்ணில் இருக்கும் பிரச்சனை குணமடைந்து இவருக்கும் மனநலமும் உடல் நலமும் நிறைவாக கிடைக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் உமது ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மிடம் உருக்கமாக மன்றாடுகிறோம்.

29-12-2023 – விண்ணப்பங்கள்

  1. எமது குழுவைச் சேர்ந்த தாயார் ஒருவர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவர் விரைவில் பூரணசுகம் பெற்று வீடு திரும்ப வேண்டும் குணமளிக்கும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  2. 6 வயது சிறுமி ஒருவருக்கு சில வாரங்களில் குடலிறக்க சத்திரசிகிச்சை செய்யப்பட உள்ள நேரத்தில் டெங்கு காய்ச்சல் தொற்றியதால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். இவருக்கு காய்ச்சல் குறைந்து சத்திரசிகிச்சை நல்லபடி நடக்க உதவி செய்ய வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. அடிக்கடி வயிற்றுநோ வரும் சிறுமி ஒருவருக்கு இரும்புசத்து குறைபாடும் இருப்பதால் பலவீனப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இவருக்கு சுகமும், பெலனும் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  4. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலை காரணமாக குடும்பமாக வருவதற்காக விசா கிடைத்தும் வேலைக்கான அழைப்பும் அனுமதிப்பத்திரமும் கிடைக்காதபடியால் மிகுந்த சிரமப்படும் விஜய் என்ற சகோதரனுக்கு விரைவில் அமெரிக்கா வந்து சேர அற்புதம் செய்ய வேண்டுமாய் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 
  5. பேச்சுத்திறனை சரிப்படுத்த இலங்கை சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுவன் மீண்டும் கனடா வந்திருக்கும் நிலையில் அவரது பேச்சுத்திறன் இன்னமும் பெருக  வழிநடத்த வேண்டும் என்று  ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. எமது தாயகத்தில் சமூக சேவையாளர் ஒருவர் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ள வேளையில் அவர் குணமடைந்து மீண்டும் மக்களுக்கான பணியைத் தொடர உதவி செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  7. மீண்டும் பரவிவரும் கோவிட் தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

நவம்பர் 23, 2023 விண்ணப்பங்கள்

  1. இந்தியாவில் பல துயரங்களுக்கூடாக  சென்று  கொண்டிருக்கும் பற்றீசியா என்ற சகோதரிக்கு இன்று இடுப்பில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருக்கும் வேளையில் அவர் பூரண குணமடைந்து எழுந்து நடக்க வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அடுத்தடுத்து வரும் Covid தாக்கத்தினாலும் கடும் காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டிருக்கும்  இளம் தாயாருக்கும் மகளுக்கும் ஆரோக்கியத்தையும் உடல் மன தைரியத்தையும் கொடுத்து சுகமளிக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இந்தியாவில் மின்சாரம் தாக்கியதால் கைகளை இழந்திருக்கும் சகோதரனுக்கு கால்தசை நார்கள், உடம்பு தசைநார்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆண்டவராகிய நீர் அவருக்கு சுகத்தையும் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் மன தைரியத்தையும் ஆறுதலையும் கொடுக்க வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இந்தியாவில் தமது 14 வயதான ஒரே மகளை வாகன விபத்தில் இழந்து தவிக்கும் இளம் பெற்றோருக்கு மன உறுதியைக் கொடுத்து விபத்தில் காயப்பட்ட தாயாருக்கும் காயங்கள் முறிவுகளில் இருந்து சுகம் கொடுத்து அவர்களின் எதிர்காலத்துக்கு ஒளியும் வழியுமாய் நீர் இருக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ரொரன்றோவில் Therapist ஆக இருக்கும் ஒருவருக்கு இரண்டாவது தடவையாக புற்றுநோய் வந்திருப்பதால் செய்யப்படும் சிகிச்சைகள் பூரணபலனையும் சுகத்தையும் கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு வகையான வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் சுகம் கிடைக்க வேண்டுமென்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. மொன்றியலில் இரண்டு பிள்ளைகளின் தகப்பன் ஒருவருக்கு இரண்டு கண்களிலும்  நீர்த்தன்மை குறைவடைவதால் கண்நோவினால் வேலை செய்ய முடியாமலும் இருப்பதால் அவருக்கு வேண்டிய சரியான சிகிச்சைகள் கிடைக்கவும் விரைவில் குணமடையவும் வேண்டுமென்று இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  7. அடிக்கடி வயிற்றுவலி வயிற்றோட்டத்தினால் அவதியியுறும் சகோதரன் சரியான சிகிச்சையைப் பெற்று குணமடைய வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

November 17, 2023 விண்ணப்பங்கள்

  1. அன்பான ஆண்டவரே, இந்தியாவில் மின்சாரம் தாக்கியதால் இரண்டு கைகளும் அகற்றப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும் சகோதரனின் புண்கள் முற்றாக குணமடைந்து செயற்கைக் கைகள் பொருத்தப்படவும் அவரும் அவரது மனைவியும் மன உறுதியுடனும் எதிர்காலத்தைக் குறித்த புதிய நம்பிக்கையுடனும் வாழவும் நீர் வரமருள வேண்டுமென்றும் இரந்து மன்றாடுகின்றோம்.
  2. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வியாபாரத்தில் உள்ள குறைவுகள் நிறைவாகவும் தடைகள் நீங்கி வியாபாரம் செழிக்கவும் எதிர்கால திட்டங்கள், தீர்மானங்கள் உமது சித்தப்படி  வழிநடத்தப்படவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. புதிய வருடத்தில் வீடு வாங்குவதற்கு விரும்பும் தாயாருக்கும் மகளுக்கும் ஏற்ற ஆசீர்வாதமான வீட்டை நீர் அடையாளம் காட்டி வழிநடத்த வேண்டுமென்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் அவர்களது காணி விற்பதற்கு இருக்கும் தடைகள் நீங்கி நல்லபடி காணி விற்கப்படவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  4. December 1ம் திகதி நடக்க இருக்கும் எமது புதுவாழ்வுக் குழுவின் நத்தார் வழிபாடும், December 22ஆம் திகதி நடைபெறவிருக்கும் வருட இறுதி நன்றி வழிபாடும் இறைபிரசன்னத்தோடு வல்லமையாக நடைபெறவும் வர இருக்கின்றவர்கள் தடைகளின்றி வந்து ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

31-10-2023 விண்ணப்பங்கள்

  1. கனடாவில் வருகிற ஆண்டு திருமணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த  என்ற 27 வயது இளம்பெண் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது இருதயத்தில் இருந்து சிறுநீரகத்திற்கு செல்லும் நரம்பு  முற்றாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் உள்ள அந்த மகளுக்கு இறந்து போன சிறுமியை உயிர்ப்பித்த ஆண்டவர் நீர்தாமே கரம்பிடித்து உயிர்வாழ வைக்க வேண்டுமாய் மன்றாடுகிறோம்.
  2. இலங்கையில் விஷப் பூச்சி அல்லது சிறிய பாம்பு கடித்ததால் விஷம் இரத்தத்தில் கலந்து சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருக்கும் அல்பிரட் என்ற இரண்டு பிள்ளைகளின் தகப்பனார் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்ப வேண்டும் என இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  3. இந்தியாவில் ஏணியில் இருந்து கீழே விழுந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகப்பனாருக்கு அற்புத சுகம் கிடைக்க வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

  1. எமது செபக்குழுவைச் சேர்ந்த சகோதரி ஒருவர் நிமோனியா, சுவாசப்பிரச்சனை போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் விரைவில் குணமடைந்து தன் குடும்ப கடமைகளைச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  2. காதுகளில் பலமான சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும், மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத அரியவகை நோயால்(Misophonia) பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமிலியா என்ற சிறுமிக்கு நீரே மருந்தாகவும் மருத்துவராகவும் இருந்து அற்புத சுகம் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  3. இந்தியாவில் முதுகில் கல் விழுந்ததால் எலும்புகள் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் தாயார் ஒருவரின் எலும்புகள் சரியான நிலைக்குத் திரும்பி அவர் விரைவில் எழுந்து நடந்து உமக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. இந்தியாவில் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்கும் வயதான தகப்பனாரை ஆண்டவர் பொறுப்பெடுக்க வேண்டும்  என்றும் அவரைப் பராமரிக்கும் மகளுக்கு வேண்டிய உடல் மன பலத்தை ஆண்டவர் கொடுக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.
  5. வீடு வாங்குவதற்காக முயற்சி செய்யும் தாயாருக்கும் மகளுக்கும் ஏற்ற ஆசீர்வாதமான வீட்டை அடையாளம் காட்டி ஏற்ற நேரத்தில் நீர் கொடுக்க வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  6. இந்தியாவில் சொந்த வீடு,நிலம் இல்லாமல் இளம் வயது பிள்ளைகளுடன் அவதிப்படும் குடும்பம் ஒன்று சிறிய நிலம் வாங்குவதற்கு எடுக்கும் முயற்சியை ஆண்டவர் நீர் ஆசீர்வதித்து அவர்களுக்கு வேண்டிய பணத்தைக் கிடைக்கும்படி செய்து விரைவில் அந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ள வழிசெய்ய வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  7. வெவ்வேறுபட்ட தேவைகளுக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும் ஒவ்வொருவரின் தேவைகளையும் ஏற்ற நேரத்தில் சந்திக்க வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

  1. வருகிற சனிக்கிழமை (21 ம் திகதி) waterlooவில் நடைபெற உள்ள வழிபாடு வல்லமையுடன்  ஆசீர்வாதமாக நடைபெற ஆண்டவர் வழிநடத்த வேண்டும் என அவரை நோக்கி மன்றாடுவோம்.
  2. சுவாசம் சம்பந்தபட்ட பிரச்சனைகளோடு இருக்கும் சகோதரன் ஒருவருக்காகவும், அடிக்கடி இருமல் வந்து கொண்டிருக்கும் இளம்தாயார் ஒருவருக்காகவும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எமது செபக்குழுவைச் சேர்ந்த சகோதரி ஒருவருக்கு நாளைக் காலை (வெள்ளிக்கிழமை) சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட சத்திரசிகிச்சை செய்யப்பட உள்ளது. அவரது சத்திரசிகிச்சை நல்லபடி நடக்கவும் பூரண குணமடைந்து உமக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
  4. 27 வயதான மகள் ஒருவருக்கும்  மற்றும் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் நீர் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் ஏற்ற துணை விரைவில் கிடைக்கவும் பெற்றோரின் துக்கம் சந்தோஷமாக மாற வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. குறிப்பிட்ட பாடம் ஒன்றைப் படிப்பதற்கு சிரம்பப்படும் மாணவன் ஒருவருக்கு நீர் ஞானத்தையும்  அறிவையும் நிறைவாக கொடுக்க வேண்டும் என  ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  6. தொடர்ச்சியான பிரச்சனைகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற முடியாமை, ஏமாற்றம் இவைகளினால் மிகவும் துன்பப்படும் குடும்பத்தை நீர் சந்திக்க வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  7. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அன்பும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் நிலவ வேண்டும் என ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

  1. வருகிற 21 ம் திகதி சனிக்கிழமை waterlooவில் நடைபெற உள்ள வழிபாடு வல்லமையுடன்  ஆசீர்வாதமாக நடைபெற ஆண்டவர் வழிநடத்த வேண்டும் என அவரை நோக்கி மன்றாடுவோம்.
  2. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரி விரைவில் குணமடைய வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. மொன்றியலில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட  தாயார் ஒருவருக்கு  இரத்தம் வெளியேறும் (internal bleeding) இடத்தை கண்டுபிடிக்க வைத்தியர்களால் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால் ஆண்டவர்தாமே அற்புதமாக வழிநடத்தி பூரண குணமளிக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.
  4. இந்தியாவில் வயிற்றில் கட்டி வளர்ந்திருப்பதால் சத்திரசிகிச்சை(surgery) செய்யப்பட உள்ள சகோதரிக்கு சரியான முறையில் சிகிச்சைகள் நடைபெற்று பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
  5. தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கும் சகோதரர்கள் பாதுகாப்பாக சென்று கனடா திரும்பி வர உதவி செய்ய வேண்டுமாய் ஆண்டவரே உம்மை  மன்றாடுகின்றோம்.

செப்டம்பர் மாத சங்கிலி செப விண்ணப்பங்கள்:

  1.  எமது செபக்குழுவினால் இந்த மாத வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்பட உள்ள தூய ஆவியார் வழிபாடுகளுக்காக மன்றாடவும்.
  2. குடும்பங்களில் இறைநம்பிக்கை, அன்பு, சமாதானம், ஐக்கியம்  நிலவ வேண்டும் என மன்றாடவும்.
  3. இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ள மனநல குறைவு சமுதாயத்தை மேலும் தாக்காதபடியும் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண குணமடைந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் மன்றாடவும்.
  4. குடும்பங்களில் இறைநம்பிக்கை, அன்பு, சமாதானம், ஐக்கியம்  நிலவ வேண்டும் என மன்றாடவும்.
  5. தனிப்பட்ட காரியம்  ஒன்றுக்காக வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிடும் இரு சகோதரர்களின் பயணம் இறைசித்தப்படி வழிநடத்தப்பட மன்றாடவும்.
  6. அவதானக் குறைவு காரணமாக முன்னேற முடியாமல் இருந்த வாலிபன் மீண்டும் படிப்பை தொடங்கி உள்ளதால் அவரின் படிப்பு வெற்றி பெற்று எதிர்காலம் சிறப்படைய வேண்டும் என்றும் மன்றாடவும்.
  7.  கல்வி ஆண்டுக்குள் பிரவேசிக்கும் பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்காவும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள், அரசாங்கத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்காக மன்றாடவும்.
  8. பேச்சுத் திறன் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்து கனடாவில் உள்ள பெற்றோருடன் விரைவில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அனைத்து சிறுவர்களுக்காகவும் மன்றாடவும்.
  9. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலவீனமாக உள்ள வயோதிபர்கள் பூரண குணமடைய வேண்டும் எனவும் அனைத்து வயோதிபர்களுக்காகவும் மன்றாடவும்.
  10. சிறுநீரக பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்றாடவும்.
  11. பல்வேறு பிரச்சனைகளில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறைவார்த்தையின் வெளிச்சத்தில் சமாதானம் பெற்று வாழ வழிகாட்ட வேண்டும் என மன்றாடவும்.
  12. இளம் சமுதாயத்திற்காகவும் அவர்களின் சிறப்பான எதிர்காலம், நல்ல தீர்மானங்களுக்காகவும் மன்றாடவும்.
  13. திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பிள்ளைகளுக்காகவும் இந்த வருடம் நடக்க இருக்கும் திருமணங்களுக்காகவும் மன்றாடவும்.
  14. குழந்தைக்காக காத்திருக்கும் குடும்பங்களுக்காகவும் கர்ப்பிணிப் பெண்களின் சுகப்பிரசவத்திற்காகவும் மன்றாடவும்.
  15. வேலை தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஏற்ற நிரந்தர வேலை கிடைக்க மன்றாடவும்.
  16. கனடா வருவதற்கு  முயற்சி செய்யும் அனைவருக்காகவும் மன்றாடவும். ஆண்டவர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி சொல்லி மன்றாடவும்