பரிந்துரை செபம்

Published by

on

பரிந்துரை செபம் என்றால் என்ன?

பரிந்துரை செபம் மற்றவர்களுக்காக செபித்தல்.

1 திமொத்தேயு 2:1

அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.

பரிந்துரை செபம் தூய ஆவியின் கொடை:

எபேசியர் 6:18

எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.

கத்தோலிக்க மக்கள்: புனிதர்கள் வழியாக அல்லது ஒப்புக்கொடுத்தல் செபம் வழியாக பரிந்துரை செபம் செய்தோம்.

அருங்கொடை வழிபாடு வழியாக தூய ஆவியாரின் துணையுடன் கிறிஸ்து வழியாக பரிந்துரைக்கிறோம்.

பரிந்துரை தூய ஆவியார் கொடை எவ்வாறு செயலாற்றுகிறது?

மற்றவர்கள் மேல் அன்பு, இரக்கம் மற்றும் அவர்களின் நன்மைகளை விரும்புகிறது.

அவர்களுக்கு விடுதலை, சுகம் மற்றும் நல்வாழ்வை இறைவனிடம் பரிந்துரைக்கிறது.

பரிந்துரை செபத்தின் தன்மை என்ன?

மற்றவர்களின் தேவைகளுக்காக இறைவனிடம் மன்றாடுதல் மற்றும் வாதிடுதல்.

வி.ப. 32:11-14

11அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? 12“மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்” என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும். 13உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே” என்று வேண்டிக்கொண்டார். 14அவ்வாறே, ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

தொ.நூ. 18:22-26

22அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். 23ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? 24ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? 25தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார். 26அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.

யோவான் 17:22-26

22அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். 23ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? 24ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? 25தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார். 26அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.

பரிந்துரை செய்பவர் வாழ்வு எவ்வாறு இருத்தல் வேண்டும்?

கடவுளுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும்:

யாக்கோபு 5:16

ஆகவே, ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

பரிந்துரை செபத்தின் சக்தி என்ன?

கடவுளின் உதவியை பெற்றுத் தரும்:

மத்தேயு 18:19

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்

மாற்றத்தை ஏற்படுத்தும்

யோவான் 2:3

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.

சூழ்நிலைகளை மாற்றுகிறது:

எண்ணிக்கை 11:1-3

1பின்னர், ஆண்டவரின் செவிகளில் படுமாறு தங்கள் கடினப்பாடுகளைப் பற்றி மக்கள் முறையிட்டனர்; ஆண்டவர் அதைக் கேட்டபோது அவருக்குச் சினம் மூண்டது; ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்தது; பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை அது எரித்துவிட்டது. 2அப்போது மக்கள் மோசேயிடம் அழுதனர்; மோசே ஆண்டவரிடம் மன்றாடவே நெருப்பு அணைந்தது. 3எனவே, அந்த இடத்துக்குத் தபேரா⁕ என்று பெயராயிற்று; ஏனெனில், ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே எரிந்தது.

(பரிந்து பேசுவது உடல் நலம், ஆன்மீக புதுப்பித்தல் மற்றும் தீங்கிலிருந்து பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.)

உறவுகளை பலப்படுத்துகிறது:

யோபு 42:8

ஆகவே இப்பொழுது, “ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்; உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன்”.

(மற்றவர்களுக்காக ஜெபிப்பது கிறிஸ்துவின் உடலுக்குள் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது.)

பரிந்துரை செய்பவரின் உள்ளம் எவ்வாறு இருத்தல் வேண்டும்?

இரக்கம் உள்ள உள்ளம்

மத்தேயு 9:36

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.

கடவுள் மேல் விசுவாசம் உள்ள உள்ளம்:

மத். 8:5-8

5இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். 6“ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். 7இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். 8நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.

விடா முயற்சியும் காத்திருத்தலும் உள்ள உள்ளம்:

லூக்கா 18:1, 7

1அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.

 7தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?

பரிந்துரை செபத்தின் ஒழுங்கு முறைகள் எவை?

  1. தேவையை அடையாளம் காணவும்:
  2. தேவைக்கு சரியாக செபித்தல்: (செபத்தில் அறிமுகத்தைத் தவிர்த்தல் – கடவுளிடம் விண்ணப்பத்தைக் கூறுவது அல்ல விண்ணப்பத்திற்காக செபித்தல்)
  3. இறைவார்த்தையை ஆதாரம் வைத்து செபித்தல்.
  4. விடா முயற்சியுடன் செபித்தல்.
  5. கடவுளின் நேரத்திற்காக (காத்திருத்தல்) அர்ப்பணித்து செபித்தல்.

பரிந்துரையாளருக்கு கிடைக்கும் ஆசீர் என்ன?

யோபு 42:10

யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார்.