தூய ஆவியார் பாடல்: ஒகஸ்ரஸ்
ஆரம்ப செபம்: அன்ரன்
புகழ்ச்சிப் பாடல்: யூடித்
புகழ்ச்சி: மதி, றாஜி
ஆராதனைப் பாடல்: தேவி
தொ.நூ. 18:16-33
1-கேழ்வியும் – பதிலும்:
தொ.நூ. 18:16
அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.
ஆபிரகாம் எவ்வாறு அந்த மனிதர்களை வழியனுப்பினார்?
தொ.நூ. 18:17
அப்பொழுது ஆண்டவர், “நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
கடவுள் எதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ எனக் கூறுகிறார்?
தொ.நூ. 18:18
“ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.
ஆபிரகாம் மூலம் எல்லா இனமும் எதைப்பெற்றுக் கொள்வார்கள்?
தொ.நூ. 18:19
ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்” என்றார்.
ஆபிரகாம் எதை நிறைவேற்றுவார் என கடவுள் எதிர்பாக்கிறார்?
தொ.நூ. 18:20
ஆதலால், ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது.
சோதோம் கொமோராவில் எது மிகவும் கொடியதாக தோன்றியது?
தொ.நூ. 18:21
என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.
கடவுள் எதைப்பார்ப்பதற்காக இறங்கி வந்தார்?
தொ.நூ. 18:22
அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.
ஆபிரகாம் எங்கே நின்றுகொண்டிருந்தார்?
தொ.நூ. 18:23
ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
ஆபிரகாம் யார் அழியக் கூடாது என மன்றாடுகிறார்?
தொ.நூ. 18:24
ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?
கடவுள் என்ன செய்ய வேண்டும் என ஆபிரகாம் எதிர்பாக்கிறார்?
தொ.நூ. 18:25
தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.
கடவுள் எவ்வாறு தீர்ப்பு வழங்குபவர் என கூறப்படுகிறது?
தொ.நூ. 18:26
அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.
கடவுள் எதன் நிமித்தம் காப்பாற்றுவேன் என கூறுகிறார்?
தொ.நூ. 18:27
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்;
ஆபிரகாம் தன்னை எவ்வாறு குறிப்பிடுகிறார்?
தொ.நூ. 18:28 – 32
ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.
தொ.நூ. 18:32
அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.
இதில் ஆபிரகாமின் செபம் எவ்வாறு இருப்பதைப் பார்க்க முடிகிறது?
தொ.நூ. 18:33
ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச் சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
செபத்திற்குப் பின் ஆபிரகாம் எங்கு சென்றார்?