March-16- வேதாகம பகிர்வு

Published by

on

தூய ஆவியார் பாடல்: மதி

ஆரம்ப செபம்: ஒகஸ்ரஸ்

புகழ்ச்சிப் பாடல்: குயின்ரஸ்

புகழ்ச்சி: யூடித் – அன்ரன்

ஆராதனைப் பாடல்: தேவி

தொ.நூ. 4:8-16

தொ.நூ. 4:13
காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.” என்றான்.
கேள்வி: காயின் தனது தண்டனை பற்றி ஆண்டவரிடம் என்ன சொன்னான்?

தொ.நூ. 4:14
“இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!” என்றான்.
கேள்வி: காயின் ஏன் பயந்தான்?

தொ.நூ. 4:15
ஆண்டவர் அவனிடம் “அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.
கேள்வி: காயினை யாரும் கொல்லாதபடி ஆண்டவர் என்ன செய்தார்?

தொ.நூ. 4:16
பின்னர், காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.
கேள்வி: காயின் ஆண்டவரின் முன்னிலையிலிருந்து சென்று எங்கே குடியேறினான்?