வேதாகம பகிர்வு – April-20

Published by

on

தூய ஆவியார் பாடல்: யூடித்

ஆரம்ப செபம்: அன்ரன்

புகழ்ச்சிப் பாடல்: றாஜி

புகழ்ச்சி: மதி-ஒகஸ்ரஸ்

ஆராதனைப் பாடல்: தேவி


தொ.நூ. 7:11-16


தொ.நூ. 7:11
நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன; வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன.

கேள்வி:
பேராழத்தின் ஊற்றுகள் எப்போது பீறிட்டெழுந்தன?


தொ.நூ. 7:12
நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.

கேள்வி:
எத்தனை நாட்கள் மண்ணுலகில் பெரு மழை பெய்தது?


தொ.நூ. 7:13
நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார்.

கேள்வி:
நோவாவுடன் பேழைக்குள் நுழைந்தவர்கள் யார்?


தொ.நூ. 7:14
அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும்,

கேள்வி:
நோவாவுடன் பேழைக்குள் சென்ற உயிரினங்கள் எவை?


தொ.நூ. 7:15
உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன.

கேள்வி:
உயிருள்ளவை எவ்வாறு பேழைக்குள் சென்றன?


தொ.நூ. 7:16
கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார்.

கேள்வி:
பேழையின் கதவை மூடியவர் யார்?