வேதாகம பகிர்வு – April-27

Published by

on

தூய ஆவியார் பாடல்: தேவி

ஆரம்ப செபம்: யூடித்

புகழ்ச்சிப் பாடல்: மதி

புகழ்ச்சி: ஒகஸ்ரஸ்-அன்ரன்

ஆராதனைப் பாடல்: தேவி

தொ.நூ. 7:17-24

தொ.நூ. 7:17
நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது; வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.

கேள்வி:
வெள்ளம் பெருக்கெடுத்தபோது பேழைக்கு என்ன ஆனது?


தொ.நூ. 7:18
மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது.

கேள்வி:
வெள்ளம் பெருகியபோது பேழை எவ்வாறு இருந்தது?


தொ.நூ. 7:19
மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.

கேள்வி:
வெள்ளம் பெருகியபோது எவை நீரில் மூழ்கின?


தொ.நூ. 7:20
மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது.

கேள்வி:
மலைகளுக்குமேல் நீர் மட்டம் எவ்வளவு உயர்ந்திருந்தது?


தொ.நூ. 7:21
நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன.

கேள்வி:
வெள்ளத்தில் எந்த உயிரினங்கள் மாண்டன?


தொ.நூ. 7:22
தரையில் வாழ்ந்தவற்றில் நாசியால் மூச்சுவிடும் அனைத்தும் செத்துப் போயின.

கேள்வி:
தரையில் வாழ்ந்தவற்றில் எவை செத்துப் போயின?


தொ.நூ. 7:23
மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன; அவை மண்ணுலகில் இராதபடி ஒழிக்கப்பட்டன. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர்.

கேள்வி:
வெள்ளத்திற்குப் பின் எவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்?


தொ.நூ. 7:24
நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.

கேள்வி:
மண்ணுலகில் வெள்ளம் எத்தனை நாட்கள் பாய்ந்து பெருகிற்று?