தூய ஆவியார் பாடல்: குயின்ரஸ்
ஆரம்ப செபம்: ஒகஸ்ரஸ்
புகழ்ச்சிப் பாடல்: றாஜி
புகழ்ச்சி: மதி – அன்ரன்
ஆராதனைப் பாடல்: தேவி
தொ.நூ. 7:1-10
தொ.நூ. 7:1
அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.”
கேள்வி:
இத்தலைமுறையில் ஆண்டவர் நேர்மையானவனாகக் கண்டவர் யார்?
தொ.நூ. 7:2
தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும் எடுத்துக் கொள்.
கேள்வி:
தக்க விலங்குகளிலிருந்து எத்தனை சோடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
தொ.நூ. 7:3
வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள்.
கேள்வி:
வானத்துப் பறவைகளிலிருந்து எத்தனை சோடிகள் சேர்க்கப்பட வேண்டும்?
தொ.நூ. 7:4
ஏனெனில், இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப்போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.
கேள்வி:
மண்ணுலகின் மேல் எத்தனை நாட்கள் மழை பெய்யப்போகிறது?
தொ.நூ. 7:5
ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்.
கேள்வி:
ஆண்டவர் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் செய்தவர் யார்?
தொ.நூ. 7:6
மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
கேள்வி:
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது எவ்வளவு?
தொ.நூ. 7:7
வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் பேழைக்குள் சென்றார்.
கேள்வி:
நோவாவுடன் பேழைக்குள் சென்றவர்கள் யார்?
தொ.நூ. 7:8–9
தக்க விலங்குகள், தகாத விலங்குகள், பறவைகள், நிலத்தில் ஊர்வன அனைத்தும் சோடி சோடியாக, ஆணும் பெண்ணுமாக, நோவாவுடன் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி பேழைக்குள் சென்றன.
கேள்வி:
விலங்குகள் எவ்வாறு பேழைக்குள் சென்றன?
தொ.நூ. 7:10
ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கேள்வி:
ஏழு நாள்களுக்குப் பின் என்ன ஏற்பட்டது?