தொ.நூ. 6:11-22
தூய ஆவியார் பாடல்: மதி
ஆரம்ப செபம்: அன்ரன்
புகழ்ச்சிப் பாடல்: ஒகஸ்ரஸ்
புகழ்ச்சி: யூடித் – றாஜி
ஆராதனைப் பாடல்: தேவி
தொ.நூ. 6:11
அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது; பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.
கடவுள் முன்னிலையில் மண்ணுலகு எவ்வாறு இருந்தது?
தொ.நூ. 6:12
கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது; மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீய வழியில் நடந்துவந்தனர்.
மண்ணுலகில் ஒவ்வொருவரும் எவ் வழியில் நடந்துவந்தனர்?
தொ.நூ. 6:13
அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.”
கடவுள் நோவாவிடம் என்ன செய்யப்போவதாக கூறுகிறார்?
தொ.நூ. 6:14
“உனக்காக கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து, அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.”
கடவுள் நோவாவிடம் என்ன கூறினார்?
தொ.நூ. 6:16
“பேழைக்குமேல் கூரை அமைத்து, அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி; பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.”
கடவுள் நோவாவிடம் எத்தனை தளங்கள் அமைக்கும்படி கூறினார்?
தொ.நூ. 6:18
“உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.”
கடவுள் நோவாவிடம் யாருடன் பேழைக்குள் செல்லும்படி கூறினார்?
தொ.நூ. 6:19
“உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா; அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.”
கடவுள் நோவாவிடம் தெரிந்தெடுக்கும் உயிரினங்கள் எவ்வகையாக இருக்க வேண்டும் என கூறினார்?
தொ.நூ. 6:22
கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
கடவுள் தமக்கு கட்டளையிட்டதை நோவா என்ன செய்தார்?