தூய ஆவியார் பாடல்: றாஜி
ஆரம்ப செபம்: தவறாஜன்
விண்ணப்ப பாடல்: தேவி
குயின்ரஸ்: பக்கவாதம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகப்பனாரின் முழுமையான சுகத்திற்காகவும்,இந்தியாவில் தலைச்சுற்று, மயக்கம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் கஷ்டப்படுகின்ற சகோதரி ஈசாவிற்காகவும்,
குளிர்காலத் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் தற்போது வைத்தியசாலையில் உள்ள அனைவருக்கும் மன்றாடவும்.
மதி:கடந்த வாரம் மோன்ரியலில் 13 வயது மகளை இழந்த குடும்பத்திற்கும், திடீர் மரணம் காரணமாக துயரத்தில் இருக்கும் அனைவருக்கும் தெய்வீக ஆறுதலுக்காகவும்,
குடிப்பழக்கம், போதைப் பொருட்கள், சூதாட்டத்தில் அடிமையாகி இருக்கும் அனைவருக்கும் விடுதலையும் நல்வாழ்க்கையும் வேண்டி செபிக்கவும்.
செல்வி:கனடாவில் கடன்கள், நோய்கள், பொருளாதார நெருக்கடி, வருமான பற்றாக்குறை காரணமாக போராடும் குடும்பங்களுக்கு கடவுளின் உதவி, சமாதானம் மற்றும் சரியான வழிகள் திறக்கப்படுவதற்காகவும்,
கோபத்தை கட்டுப்படுத்த முடியாததால் சிரமம் அடையும் ஒரு குடும்பத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்காகவும்,
சூனியம், மந்திரம், செய்வினை மற்றும் இருளின் ஆதிக்கங்களில் கட்டுண்டு இருக்கும் குடும்பங்களின் முழுமையான விடுதலைக்காகவும் செபிக்கவும்.
பாடல்: சாந்தி
விண்ணப்ப செபம்: சாந்தி (இந்தியா)
விண்ணப்ப செபம்: தயாழினி
விண்ணப்ப செபம்: Naomi
யூடித்:வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு கடவுளின் பாதுகாப்பிற்காகவும்,
இலங்கையில் இருந்து கனடா மற்றும் இங்கிலாந்து வர முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தேவையான வாய்ப்புகள், உதவிகள், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலுக்காகவும்,
இளைய சமுதாயத்திற்கும், மனநிலை பாதிப்பு, பயம், பதட்டம், மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்காகவும் செபிக்கவும்.
மரினா சாந்தி:புதிய வேலையில் சேர்ந்தவர்களின் வேலைகளுக்காகவும்,
வேலை தேடுபவர்கள், வேலை செய்து கொண்டிருப்பவர்கள், தங்கள் சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் செபிக்கவும்.
அன்ரன்:திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு சரியான துணை கிடைப்பதற்காகவும்,
திருமணம் செய்ய தயக்கம் அல்லது மறுப்பு கொண்டிருக்கும் இளைஞர்களுக்காகவும்,
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் திருமணங்களுக்காக, புதிதாக திருமணமான தம்பதிகளுக்காக மற்றும் இளம்தலைமுறையினரின் குடும்ப வாழ்க்கை கடவுளை மாட்சிப்படுத்தும் முறையில் அமைய வேண்டி செபிக்கவும்.
றாஜி:குழந்தைக்காக காத்திருக்கும் குடும்பங்களுக்காகவும்,
கர்ப்பிணிப் பெண்களுக்காகவும், சுகப்பிரசவத்திற்காகவும்,
புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செபிக்கவும்.
சதா:எமது புதுவாழ்வு குழுவின் அனைத்து பணிகளுக்காகவும், கடவுளின் வழிநடத்தல், இறை பிரசன்னம் மற்றும் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டியும்,
வரவிருக்கும் விசேட வழிபாடுகள் நிகழ்ச்சிகள் (நத்தார், நன்றி, புது வருட ஆசீர் வழிபாடுகள்) மற்றும் ஊழியங்களுக்கு கடவுளின் வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பிற்காகவும் செபிக்கவும்.
பாடல்: யூடித்
நன்றி: செல்வி
முடிவு செபம்: தவறாஜன்