ஆரம்ப செபம்: தவறாஜன்
தூய ஆவியார் பாடல்: தேவி
செபிப்பவர்கள் Please turn on your video.
விண்ணப்ப செபங்கள்:
குயின்ரஸ்
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் பவிதா என்ற 35 வயது இளம்தாயாருக்காக மன்றாடுவோம்.
தங்களுக்கு சொந்தமான இடத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கு பல சிரமங்களை சந்தித்து கொண்டிருக்கும் குடும்பத்திற்காக மன்றாடுவோம்.
குடும்ப உறவுகளில் ஏற்பட்ட விரிசல்கள், சிக்கல்கள், கடன் பிரச்சனைகளினால் மனப் போராட்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுவோம்.
செல்வி
நோயின் படுக்கையிலும், மறதிநோய் (Dementia), நினைவாற்றல் இழப்பு (Alzheimer’s) போன்ற பாதிப்புகளாலும், தனிமையிலும் இருக்கும் முதிய பெற்றோருக்காக மன்றாடுவோம்.
உலக பொருளாதார நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் நாம் ஞானமாக செயல்படவும், எமது வருமானங்கள் ஆசீர்வதிக்கப்படவும் மன்றாடுவோம்.
இலங்கையில் உணவு உண்ணாமல் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் வயதான தாயாருக்காக மன்றாடுவோம்.
யூடித்
இந்தியாவில் குயின்ரன் என்ற சகோதரனுக்கு இருக்கும் சிறுநீரக கல் பிரச்சனையிலிருந்து அற்புத சுகம் கிடைக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.
எலும்புகள் பலவீனமாக இருக்கும் சிறுவனுக்கு வேண்டிய பலம் இறைவனின் வல்லமையால் கிடைத்து, எலும்புகள் உறுதியாகவும், அவரது கழுத்தில் இருக்கும் எலும்பு சரியான ஒழுங்கில் அமையவும் மன்றாடுவோம்.
13 வருடங்கள் சுவிஸ்(Switzerland) நாட்டில் வசித்து, தனது மனைவியை அங்கு அழைக்கும் கட்டத்தில் இருந்த இளம் குடும்ப தலைவனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் நமது தாய்நாடு திரும்பி உள்ளார். அவர் பூரண குணமடைந்து தனது மனைவியுடன் மீண்டும் சுவிஸ் நாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று மன்றாடுவோம்.
பாடல்: செல்வி
நயோமி:
சாந்தி(இந்தியா)
தயாழினி:
சாந்தி
பல்வேறு சூழ்நிலைகளில் மனக்குழப்பத்தால் போராடிக் கொண்டிருப்பவர்கள் மனஅமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ மன்றாடுவோம்.
போர், காலநிலை மாற்றம், வறுமை மற்றும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்காகவும் மக்களுக்காகவும் மன்றாடுவோம்.
திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் ஏற்ற துணை கிடைக்கவும், திருமணம் செய்ய மறுத்து நிற்கும் இளம்பிள்ளைகளுக்காகவும், திருமண வாழ்வுக்கு திட்டமிடுபவர்களுக்காகவும், இந்த வருடம் நடைபெற இருக்கும் திருமணங்களுக்காகவும், புதிதாக திருமணமான தம்பதிகளுக்காகவும், இளம்தலைமுறையினருக்காகவும் மன்றாடுவோம்.
ஒகஸ்ரஸ்
குழந்தைக்காக காத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்காகவும், கர்ப்பிணிப் பெண்களின் சுகப்பிரசவத்திற்காகவும், புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்காகவும் மன்றாடுவோம்.
எமது புதுவாழ்வுக் குழுவின் பணிகள், வழிபாடுகள் மற்றும் அனைத்து இறைப்பணிகளுக்காகவும் மன்றாடுவோம்.
கிறிஸ்ரியின் முழங்கால் வீக்கம் குணமடைந்து, பழையபடி நடக்கவும், மீண்டும் வழிபாட்டில் பங்குபற்றவும் மன்றாடுவோம்.
றாஜி
எமது தாயகத்தில் சிறிய தொழில் ஒன்றை ஆரம்பிக்க உள்ள குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட மன்றாடுவோம்.
கடன் பிரச்சனையால் நிம்மதியில்லாமல் பல போராட்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் இளம்தகப்பனார் ஒருவருக்கு வேண்டிய வழிகளை இறைவன் திறந்து, பணத்தை கையாளும் ஞானத்தையும் அருள வேண்டும் என்று மன்றாடுவோம்.
வரவிருக்கும் குளிர்காலத்தில் அனைவரின் பாதுகாப்பிற்காகவும், உடல்நலத்திற்காகவும் மன்றாடுவோம்.
பாடல்: சாந்தி
நன்றி: செல்வி
செபம்: தவறாஜன்