தூய ஆவியார் பாடல்: சாந்தி
ஆரம்ப செபம்: தவறாஜன்
தூய ஆவியார் பாடல்: தேவி
விண்ணப்ப செபம்: றாஜி
கனடாவிலும் வேறு பல நாடுகளிலும் நிலவும் அசாதாரண கால சூழலுக்காகவும்,
தேவைகள்,பிரச்சனைகள், போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்காகவும், வெளிநாட்டு பிரயாணங்களை மேற்கொள்பவர்களுக்ககவும் மன்றாடவும்.எமது புதுவாழ்வுக் குழுவின் பணிகள், வழிபாடுகளுக்காக மன்றாடவும்.
விண்ணப்ப செபம்: யூடித்
தனது எதிர்காலத்தை குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் இளைஞன் ஒருவருக்காகவும்,அனைத்து இளம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும்,
தவறான பழக்கவழக்கங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட அனைத்து இளம் பிள்ளைகளுக்காகவும்,
நெஞ்சில் உள்ள எலும்பு ஒன்று சிறிதுவெளியே தள்ளி இருப்பதன் காரணத்தால் நோவு ஏற்பட்டு வைத்திய சிகிச்சை செய்து கொண்டிருக்கும் இளைஞனுக்காகவும் மன்றாடவும்.
விண்ணப்ப செபம்: குயின்ரஸ்
தோல் சம்பந்தப்பட்ட குறைபாடு உள்ளவருக்காகவும், பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும்,
அடிக்கடி தலைவலி வருவதாலும்,மலச்சிக்கலாலும் மிகுந்த சிரமப்படும் இளம்தகப்பன் ஒருவருக்காகவும்,
கனடாவில், உடல்நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண் வைத்தியர் ஒருவருக்காகவும்,
இங்கிலாந்தில், உடல் முழுவதும் ஏற்பட்ட நோவால் வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருக்கும் தகப்பனாருக்காகவும்,
கனடாவில், சகோதரி ஒருவருக்கு கண்ணின் பின்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் சிறிய குறை நீங்கி அற்புத குணமடைய வேண்டும் என்றும் நீண்டகால இருமலால் சிரமப்படும் சிலருக்காகவும் மன்றாடவும்.
விண்ணப்ப செபம்: மதி
பல வருடங்களாக குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் காணமுடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நான்கு பிள்ளைகளின் குடும்பத்திற்காகவும்,
தேவைகள்,பிரச்சனைகள், போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்காகவும் மன்றாடவும்.
பாடல்: குயின்ரஸ்
விண்ணப்ப செபம்: Naomi
விண்ணப்ப செபம்: தயாழினி
விண்ணப்ப செபம்: சாந்தி (இந்தியா)
விண்ணப்ப செபம்: செல்வி
கனடாவிற்கு வந்த இளம்தாய் இந்தியாவில் உள்ள தனது பிள்ளைகளை கனடாவிற்கு அழைப்பதற்கு இருக்கும் தடைகள் நீங்க மன்றாடவும்.
மனைவியும் பிள்ளைகளும் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில், இங்கிலாந்தில் இருக்கும் இராமச்சந்திரன் என்ற சகோதரனுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் இவருக்கு பூரண சுகம் கிடைக்கவும், குடும்பத்திற்கு விசா கிடைக்கவும் மன்றாடவும்.
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு வேலை விசா மூலம் இளைஞன் ஒருவருக்கு விசா புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் மிகவும் மனக்குழப்பம் அடைந்த நிலையில் மருத்துவமும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கும் இளைஞனுக்காக மன்றாடவும்.
அமெரிக்க வேலை விசாவிற்காக காத்திருக்கும் சகோதரனுக்கு இருக்கும் தடைகள் நீங்க மன்றாடவும்.
பாடல்: றாஜி
விண்ணப்ப செபம்: ஒகஸ்ரஸ்
புதிய வேலையில் சேர்ந்துள்ளவர்களின் வேலைகளுக்காகவும், வேலை தேடுபவர்கள்,வேலை செய்பவர்கள், சொந்த தொழில், சொந்த வியாபாரம் செய்பவர்களுக்காகவும் மன்றாடவும்.
புதிய வேலையில் சேர்ந்துள்ளவர்களின் வேலைகளுக்காகவும், வேலை தேடுபவர்கள்,வேலை செய்பவர்கள், சொந்த தொழில், சொந்த வியாபாரம் செய்பவர்களுக்காகவும் மன்றாடவும்.
விண்ணப்ப செபம்: சாந்தி மேவின்
பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் தனது திருமணத்தை நண்பர்களோடு நடத்த திட்டமிடும் மகளுக்காக மன்றாடவும்.
திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் ஏற்ற துணை கிடைக்கவும், திருமண வாழ்வுக்கு திட்டமிடுபவர்களுக்காகவும்,இந்த வருடம் நடக்க இருக்கும் திருமணங்களுக்காகவும், புதிதாக திருமணமான தம்பதிகளுக்காகவும் மன்றாடவும்.
குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் மகன் விரைவில் குடும்பத்துடன் இணைந்து கொள்ள மன்றாடவும்.
விண்ணப்ப செபம்: அன்ரன்
குழந்தைக்காக காத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்காகவும், கர்ப்பிணிப் பெண்களின் சுகப்பிரசவத்திற்காகவும், புதிதாக பிறந்த குழந்தைகள், சிறுகுழந்தைகளுக்காகவும் மன்றாடவும்.
நன்றி: செல்வி
முடிவு செபம்: தவறாஜன்