தூய ஆவியார் பாடல்: ஒகஸ்ரஸ்
ஆரம்ப செபம்: மதி
புகழ்ச்சிப் பாடல்: யூடித்
புகழ்ச்சி: றாஜி – அன்ரன்
ஆராதனைப் பாடல்: தேவி
தொ.நூ. 4:8-12
தொ.நூ. 4:8
காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.
கேள்வி: காயின் ஆபேலை எங்கே கூட்டிச் சென்றான்?
தொ.நூ. 4:9
ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.
கேள்வி: ஆண்டவர் காயினிடம் என்ன கேள்வி கேட்டார்?
தொ.நூ. 4:10
அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.”
கேள்வி: ஆண்டவர் காயினிடம் “உன் சகோதரனின் இரத்தம் எங்கே இருந்து என்னை நோக்கிக் கதறுகிறது?” என்று சொன்னார்?
தொ.நூ. 4:11
இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
கேள்வி: காயின் ஏன் சபிக்கப்பட்டான்?
தொ.நூ. 4:12
நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய் என்றார்.
கேள்வி: காயினுக்கு ஆண்டவர் எந்த தண்டனையை அறிவித்தார்?