தூய ஆவியார் பாடல்: றாஜி
ஆரம்ப செபம்: யூடித்
புகழ்ச்சிப் பாடல்: குயின்ரஸ்
புகழ்ச்சி: ஒகஸ்ரஸ் – அன்ரன்
ஆராதனைப் பாடல்: தேவி
📖 தொ.நூ. 6:1–8
தொ.நூ. 6:1 மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,
மண்ணில் மனிதர்களின் நிலையில் என்ன ஏற்பட்டது?
தொ.நூ. 6:2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.
தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் என்ன ஆக்கிக்கொண்டனர்?
தொ.நூ. 6:3 அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்” என்றார்.
கடவுள் தன் ஆவி யாரில் தங்கப் போவதில்லை என கூறுகிறார்?
இனி மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என கூறப்படுகிறது?
தொ.நூ. 6:4 தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர்.
தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அந்தக் குழந்தைகள் யார் என கூறப்படுகிறார்கள்?
தொ.நூ. 6:5 மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.
கடவுள் மனிதர்களிடம் எதைக் கண்டார்?
தொ.நூ. 6:6 மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.
மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் எதை உணர்ந்தார்?
தொ.நூ. 6:7 அப்பொழுது ஆண்டவர், “நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில், இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்” என்றார்.
கடவுள் மனிதரையும் மற்ற உயிரினங்களையும் என்ன செய்வேன் என கூறுகிறார்?
கடவுள் உயிரினங்களை உருவாக்கியதற்காக எதை உணர்ந்தார்?
தொ.நூ. 6:8 ஆனால், நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.
நோவாவுக்கு ஆண்டவரின் என்ன கிடைத்தது?