தூய ஆவியார் பாடல் – தேவி
ஆரம்ப செபம் – அன்ரன்
புகழ்ச்சிப் பாடல் – மதி
புகழ்ச்சி செபம் – ஒகஸ்ரஸ், யூடித்
ஆராதனைப் பாடல் – றாஜி
தொ.நூ. 8:13-22
வாசிப்பவர்: தேவி
தொ.நூ. 8:13
அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது.
கேள்வி: மண்ணுலகப் பரப்பில் வெள்ளம் எப்போது வற்றியது?
வாசிப்பவர்: மதி
தொ.நூ. 8:14
இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது.
கேள்வி: இரண்டாம் மாதத்தின் எந்த நாளில் மண்ணில் நீர் முழுதும் வற்றியது?
வாசிப்பவர்: றாஜி
தொ.நூ. 8:15-16
அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது: “நீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.
கேள்வி: பேழையிலிருந்து வெளியே வர சொன்னவர்கள் யார்?
வாசிப்பவர்: அன்ரன்
தொ.நூ. 8:17
உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்.”
கேள்வி: உயிரினங்களை வெளியே கொண்டு செல்ல நோவாவிடம் கடவுள் கட்டளையிட்டார் எதற்காக?
வாசிப்பவர்: குயின்ரஸ்
தொ.நூ. 8:18
ஆகவே, நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர்.
கேள்வி: பேழையிலிருந்து வெளியே வந்தவர்கள் யார்?
வாசிப்பவர்: ஒகஸ்ரஸ்
தொ.நூ. 8:19-20
விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன. அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.
கேள்வி: நோவா ஆண்டவருக்கு என்ன செய்தார்?
வாசிப்பவர்: தேவி
தொ.நூ. 8:21
ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில், மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.”
கேள்வி: கடவுள் மனிதரை சபிக்கமாட்டாதிருப்பதற்கான காரணம் என்ன?
வாசிப்பவர்: றாஜி
தொ.நூ. 8:22
மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.
கேள்வி: கடவுள் மண்ணில் ஏற்படுத்தும் கால பரிமாணங்கள் எவ்வாறு இருக்கும் என்று சொன்னார்?