தூய ஆவியார் பாடல் – மதி
ஆரம்ப செபம் – அன்ரன்
புகழ்ச்சிப் பாடல் – தேவி
புகழ்ச்சி செபம் – யூடித், ஒகஸ்ரஸ்
ஆராதனைப் பாடல் – றாஜி
தொ.நூ. 9:18-25
வாசிப்பவர்: றாஜி
தொ.நூ. 9:18-19
சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெள்வந்த நோவாவின் புதல்வர். காம் கானானின் தந்தை. இவர்கள் மூவரும் நோவாவின் புதல்வர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது.
கேள்வி: மண்ணுலகில் மனித இனம் எப்படி பரவியது?
வாசிப்பவர்: மதி
தொ.நூ. 9:21
அவர் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகித் தம் கூடாரத்தில் ஆடை விலகிக் கிடந்தார்.
கேள்வி: நோவா எதைச் செய்ததால் போதைக்குள்ளாகி ஆடை விலகிக் கிடந்தார்?
வாசிப்பவர்: குயின்ரஸ்
தொ.நூ. 9:22
கானானின் தந்தையாகிய காம் தன் தந்தை திறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.
கேள்வி: காம் என்ன செய்தார்?
வாசிப்பவர்: யூடித்
தொ.நூ. 9:23
அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர். அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.
கேள்வி: சேம் மற்றும் எப்பேத்து தங்கள் தந்தையின் மேனியை எப்படி மூடினர்?
வாசிப்பவர்: அன்ரன்
தொ.நூ. 9:24-25
நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார். அப்பொழுது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்; தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.” என்றார்.
கேள்வி: நோவா கானான் பற்றி என்ன சொன்னார்?