தூய ஆவியார் பாடல் – தேவி
ஆரம்ப செபம் – மதி
புகழ்ச்சிப் பாடல் – றாஜி
புகழ்ச்சி செபம் – ஒகஸ்ரஸ், அன்ரன்
ஆராதனைப் பாடல் – யூடித்
தொ.நூ. 9:1–6
வாசிப்பவர்: றாஜி
தொ.நூ. 9:1
கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்.”
கேள்வி: கடவுள் நோவாவுக்கும் அவருடைய புதல்வருக்கும் என்ன ஆசி வழங்கினார்?
வாசிப்பவர்: யூடித்
தொ.நூ. 9:2
மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கேள்வி: மண்ணுலகின் எல்லா உயிரினங்களும் யாரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டன?
வாசிப்பவர்: தேவி
தொ.நூ. 9:3
நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
கேள்வி: கடவுள் மனிதருக்காக எந்த வகையான உணவை வழங்கினார்?
வாசிப்பவர்: மதி
தொ.நூ. 9:4
இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள்.
கேள்வி: இறைச்சியை எவ்வாறு உண்ணக்கூடாது?
வாசிப்பவர்: அன்ரன்
தொ.நூ. 9:5
உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
கேள்வி: மனிதரின் உயிருக்கு கடவுள் யாரிடம் ஈடு கேட்பார்?
வாசிப்பவர்: குயின்ரஸ்
தொ.நூ. 9:6
ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.
கேள்வி: மனிதர் யார் உருவில் படைக்கப்பட்டார்?