வேதாகமப் பகிர்வு: August-17

Published by

on


தூய ஆவியார் பாடல் – தேவி

ஆரம்ப செபம் – அன்ரன்

ஆராதனைப் பாடல் – றாஜி


வாசிப்பவர்: றாஜி

தொ.நூ. 11:6
அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது


வாசிப்பவர்: யூடித்

தொ.நூ. 11:7
வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” என்றார்.


வாசிப்பவர்: அன்ரன்

தொ.நூ. 11:8
ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.


வாசிப்பவர்: ஒகஸ்ரஸ்

தொ.நூ. 11:9
ஆகவே, அது “பாபேல்” என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.