வேதாகமப் பகிர்வு: August-24

Published by

on


தூய ஆவியார் பாடல் – மதி

ஆரம்ப செபம் – யூடித்

ஆராதனைப் பாடல் – தேவி


வாசிப்பவர்: செல்வி

தொடக்க நூல் 12:1

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்” என்றார்.


வாசிப்பவர்: மதி

தொடக்க நூல் 12:2

“உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.”


வாசிப்பவர்: தேவி

தொடக்க நூல் 12:3

“உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.


வாசிப்பவர்: அன்ரன்

தொடக்க நூல் 12:4

ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் காரானை விட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.