வேதாகமப் பகிர்வு: August-31

Published by

on

தூய ஆவியார் பாடல் – ஒகஸ்ரஸ்
ஆரம்ப செபம் – செல்வி
ஆராதனைப் பாடல் – தேவி

தொட.நூ. 12-5-9

வாசிப்பவர்: யூடித்
தொ.நூ. 12:5 “ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.”

வாசிப்பவர்: தேவி
தொ.நூ. 12:6 “ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.”

வாசிப்பவர்: றாஜி
தொ.நூ. 12:7 “ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, ‘உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்’ என்றார். ஆகவே, தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார்.”

வாசிப்பவர்: அன்ரன்
தொ.நூ. 12:8–9 “ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார். இவ்வாறு, ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.”