வேதாகமப் பகிர்வு-Sep-21

Published by

on


தூய ஆவியார் பாடல் – தேவி

ஆரம்ப செபம் – அன்ரன்


வாசிப்பவர்: அன்ரன்

தொடக்க நூல் 12:10

அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.


வாசிப்பவர்: தேவி

தொடக்க நூல் 12:11

அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், “நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.


வாசிப்பவர்: செல்வி

தொடக்க நூல் 12:11-13

அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், “நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும். எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது “இவள் அவனுடைய மனைவி” எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்; உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர். உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு” என்றார்.


வாசிப்பவர்: யூடித்

தொடக்க நூல் 12:14-15

14ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர். 15பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


வாசிப்பவர்: றாஜி

தொடக்க நூல் 12:16

அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்; ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.